வீராங்கனை தனலட்சுமியின் இரட்டை சாதனை...!

24-வது தேசிய ஃபெடரேஷன் சீனியர் விளையாட்டுப் போட்டிகள் பாட்டியாலாவில் நடந்து வருகிறது.
வீராங்கனை தனலட்சுமியின் இரட்டை சாதனை...!

24-வது தேசிய ஃபெடரேஷன் சீனியர் விளையாட்டுப் போட்டிகள் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. மார்ச் 17 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி "ஓட்டப் புயல்' டுட்டீ சந்த் வீராங்கனையை தோல்வி அடையச் செய்து புதிய சாதனை படைத்தார்.

டுட்டீ சந்த் 100 மீ. தூரத்தைக் கடக்க 11.58 நொடிகள் எடுத்துக் கொண்டார். தனலட்சுமி 11.39 நொடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த மகிழ்ச்சியின் ஆரவாரம் அடங்குவதற்குள்ளாகவே தனலட்சுமி இன்னொரு சாதனையையும் ஏற்படுத்தி தலைப்பு செய்தியாக மாறினார். 200 மீ. தூர வேக ஓட்டத்தில் 1998-இல் மலபார் எக்ஸ்பிரஸ்' பி. டி. உஷா ஏற்படுத்திய சாதனையை இதுவரை யாராலும் தகர்க்க முடியவில்லை. உஷா 200 மீ. தூரத்தை 23.30 நொடிகளில் கடந்தார். தனலட்சுமி, 200 மீ. தூரத்தை 23.26 நொடிகளில் கடந்து சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

உடன் ஓடிய, அஸ்ஸாமைச் சேர்ந்த சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் ஹீமாதாஸ் 24.39 நொடிகளில் கடந்து இரண்டாவதாக வந்துள்ளார். உஷாவின் சாதனையை உடைத்ததுடன், புகழ் பெற்ற ஹீமா தாûஸயும் ஒரே போட்டியில் தனலட்சுமி கடந்து சென்று தலைப்பு செய்தியாகவும் மாறினார்.

யார் இந்த தனலட்சுமி?

தனலட்சுமி திருச்சியைச் சேர்ந்தவர். வயது 22 . தனலட்சுமியின் பயிற்சியாளர் மணிகண்ட ஆறுமுகன். மணிகண்டனும் தடகள ஓட்டக்காரர். இன்னொரு தடகள ஓட்டக்காரரான இலக்கியதாசன் என்பவரிடமும் தனலட்சுமி பயிற்சி பெறுகிறார்.
""ஒலிம்பிக்சில் பங்கெடுக்க 200 மீ. தூரத்தை 22 .80 நொடிகளில் கடக்க வேண்டும். முயற்சி செய்தால் தனலட்சுமியால் ஒலிம்பிக்ஸ் நுழைவு தேர்விலும் வெற்றி பெற முடியும் என்கின்றனர்'' தனலட்சுமியின் ஓட்டத் திறமையைக் கண்ட ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com