கிச்சன் டிப்ஸ்..

தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால் அவற்றுடன் புளிக்காத தயிர் பொடியாக நறுக்கிய வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால் சுவையான ராய்த்தா தயார்.
கிச்சன் டிப்ஸ்..

தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால் அவற்றுடன் புளிக்காத தயிர் பொடியாக நறுக்கிய வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால் சுவையான ராய்த்தா தயார்.

சாதம் மிஞ்சிவிட்டால் அதனுடன் தேவைக்கேற்ப உப்பு, மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து காய வைத்தால் சுவையான வடாம் ரெடி.

சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோ வேவ் அவனில் வைத்து சூடாக்கினால் மென்மையாகிவிடும்.

பச்சை மிளகாய் அதிகம் இருந்தால் அழுகுவதற்குள் கொதிக்கும் வெந்நீரில் போட்டுக் கிளறி மூடி வைத்து பின் வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் மோர்க்குழம்பு, அவியல், சட்னி அரைக்கும்போது உபயோகித்தால் நிறம் மாறாமல் வெண்மையாக இருப்பதுடன் காரமும் குறையாமல் இருக்கும்.

இட்லி மாவு மீந்துவிட்டால், சிறிது துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு ஊறவைத்து, மிளகாய் வற்றலுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கிப் போட்டு சுவையான அடையாக தயாரித்து விடலாம்.

கூட்டு செய்ய தேங்காயும் பருப்பும் இல்லையா? கவலை வேண்டாம். ஒரு தம்ளர் பாலில் மூன்று ஸ்பூன் கடலைமாவு, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் பொடித்த சீரகம் இவற்றைக் கலந்து காய்கறியில் கொட்டி, ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி தாளித்து விட்டால் போதும். தேங்காய் அரைத்த கூட்டு தோற்றுப் போகும்.

தயிர் சீக்கிரத்தில் புளித்துப் போகிறதா, தயிருக்கு உறை ஊற்றும்போது சின்னமண் பாத்திரத்தில் உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக இருப்பதுடன் விரைவிலும் புளித்துப் போகாது.

ஊற வைத்த புளி அதிகமாகிவிட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஃ ப்ரீசரில் வைத்துவிட்டால் போதும் தேவைப்படும்போது ஐஸ்க்யூப் புளியை உபயோகித்துக் கொள்ளலாம்.

இட்லி மீந்துவிட்டால் அதை வீணாக்கிவிடாமல் உதிர்த்து ஏலக்காய்ப் பொடி போட்டு ஆவியில் வேகவிட்டு சர்க்கரையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்தால் சுவையான இட்லிப் புட்டு ரெடி.

பால் பிழிந்தெடுத்த தேங்காய்த் துருவலை வெளியே கொட்ட வேண்டாம். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து உப்பு, புளி, காரம் , பூண்டுப் பற்கள் சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com