பலாப்பழத்தின் நன்மைகள்!

பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.
பலாப்பழத்தின் நன்மைகள்!

பலாப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.

புற்றுநோயை தடுக்கும்:

பலாப்பழத்தில் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பிளே வானாய்டுகள், பைட்டோ நியூட்ரின்ஸ் அதிகமாக உள்ளது. உடலில் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் பலாப்பழத்துக்கு உண்டு. முக்கியமாக குடல் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்த மருந்தாக விளங்குவது பலாப்பழம்.

தைராய்டு நோயை குணப்படுத்தும்:

பலாப்பழத்தில் காப்பர் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இயங்குவதற்கு காப்பர் சத்து மிகவும் அவசியம். எனவே, தைராய்டு பிரச்னை உள்ளவர்கள். பலாப்பழம் சாப்பிட்டு வர இந்த நோய் விரைவில் குணமாகும்.

எலும்பை வலுவாக்கும்:

பலாப்பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. பலாப்பழம் சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்கும் எலும்புகள் வலுவாகி ஆஸ்டியோபோரஸ் போன்று உருவாகும் நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது. பலாப்
பழம் சாப்பிடுவதால் எலும்பு தேய்மானம், பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலி பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

பலாப்பழத்தில் அதிகமாக வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அடங்கியுள்ளது. பலாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்கும். உடலில் ரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்னையை குணமாக்கும்:

பலாப்பழத்தில் நார்ச்சத்துகள் அதிகமாக அடங்கியுள்ளதால் செரிமான பகுதிகளை சீராக வைத்திருக்கும். மலச்சிக்கல் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும்:

பலாப்பழத்தில் அதிகமாக பொட்டாசியம் சத்துகள் இருக்கின்றன. உடலில் இருக்கும் ரத்தத்தில் சோடியம் அளவை சீராக்கி ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க பலாப்பழம் உதவுகிறது. பலாப்பழத்தில் இருக்கக் கூடிய வைட்டமின் பி6 ரத்தத்தில் அடங்கியுள்ள ஹோமோசிஸ்டின் (homocysteine) அளவை குறைத்துவிடும். குறிப்பாக இருதய துடிப்பு பிரச்னையும் குணப்படுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com