கதம்பம்! 

""கடினமான உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. நடிப்புத் துறையைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளுமே எனக்கு புதிதுதான்.
கதம்பம்! 

விலகும் எண்ணமில்லை!


""கடினமான உழைப்புக்கு ஈடு ஏதும் இல்லை என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. நடிப்புத் துறையைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளுமே எனக்கு புதிதுதான். இதனால்தான் பனிரெண்டு ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து இருப்பதாக கருதுகிறேன். 2019 - ஆம் ஆண்டு வெளியான என்னுடைய படம் "ஓ பேபி' யில் பணியாற்றியவர்களில் பாதி பேர் பெண்கள், ஒரு நடிகை செட்டில் இருக்கும்போது கூடவே பெண்களும் அதிகமாக இருக்கிறார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது நல்லது. இரண்டொரு வருடங்களில் திரையுலகிலிருந்து விலகி விடலாமா என்று நான் நினைத்தது உண்மை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் இந்தத் திரையுலகுடன் தொடர்பில் இருப்பதால் தற்போதைக்கு விலக முடியாதென்றே நினைக்கிறேன்'' என்று கூறுகிறார் சமந்தா அக்கினேனி.


சம்பிரதாயங்களை உடைத்தேன்!


""என்னுடைய படிப்பை முடித்தவுடன் என்ஜீனியராக வேண்டுமென்று என் குடும்பத்தினர் நினைத்ததற்கு மாறாக நான் மாடலிங் மற்றும் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் நடுத்தரக் குடும்பப் பெண்கள் மாடலிங் செய்வது நல்லதல்ல என்று கருதினார்கள். என்னைத் தனியாக யார் வீட்டிற்கும் அனுப்பவும் மாட்டார்கள். தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது என்னுடைய தங்கை எனக்குத் துணையாக வருவார். நாளடைவில் நான் சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன் என்று என்னுடைய தந்தை கருதினார். ஆனால் குடும்பத்தில் முதல் பெண்ணாக பிறந்த நான் சம்பிரதாயங்களை உடைத்து உடன்பிறந்தவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினேன். கடைசியில் என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு ஒத்துழைப்பு தர முன்வந்தனர். இது மட்டுமல்ல. அடுத்த தலைமுறையினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இன்று நிறைய பெண்கள் திரையுலகில் தங்கள் திறமையை வெளிப்படுத்த பல துறைகளில் பணிபுரிவது நல்ல முன்னேற்றமாகும்'' என்கிறார் தாப்ஸி பன்னு.

- அருண்

முதல் பெண்அதிபர்!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான் சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றார். அந்த நாட்டின் அதிபராக இதுவரை பொறுப்பு வகித்து வந்த அதிபர் ஜான் மெகுஃபலி காலமானதைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து வந்த சமியா அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

- கோட்டாறு. ஆ.கோலப்பன்

செல்லப் பெண்!

சய்ப் அலிகானின் மகள் சாரா அலிகான், இந்திப் படங்களில் நடித்து வருகிறார். ‘அற்ழ்ஹய்ஞ்ண்ழ்ங்’ என்ற படத்திற்காக சமீபத்தில் வெளிப்புற படபிடிப்புக்கு சென்ற போது, ஒரு கடையின் முன் நிறுத்தி டீ குடித்துவிட்டு, அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதற்கு இரு காரணங்களையும் அவரே கூறியுள்ளார்.

"" டீ அதிகம் குடிப்பவள் நான். அதனால் டீ குடிக்க நிறுத்தினேன். மற்றொன்று, கடையின் பெயர் "சய்ப் சாய் வாலா'. இந்தப் பெயர் என் தந்தையை நினைவூட்டியது. நான் என் தந்தையிடம் மிகுந்த அன்பு கொண்டவள். அதனால்தான் இங்கு டீ குடிக்க நிறுத்தினேன்'' என்கிறார்.

- ராஜேஸ்வரி, பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com