வெஜிடபிள் சாண்ட்விச்
By - கே.அஞ்சம்மாள், ராம்நாடு. | Published On : 17th August 2021 12:00 AM | Last Updated : 20th August 2021 05:05 PM | அ+அ அ- |

தேவையானவை:
கோதுமை பிரெட் - ஒரு பாக்கெட்
கேரட் துருவல் - ஒரு கிண்ணம்
பெரிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் - தலா 1
இஞ்சி விழுது - ஒருதேக்கரண்டி
நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
வெண்ணெய் - 100 கிராம்
புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கேரட், வெங்காயம், குடமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். புதினாவை வதக்கி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இஞ்சி விழுது, வெண்ணெய் சேர்த்துக் குழைத்து பிரெட்டில் தடவவும். அதன்மேல் பரவலாக வதக்கிய காய்களை வைத்து, கொத்துமல்லி தூவி, மேலே ஒரு ஸ்லைஸ் பிரெட் வைத்து, டோஸ்ட்டரில் டோஸ்ட் செய்து கொடுக்கவும்.
குறிப்பு: கோதுமை பிரெட் நார்ச்சத்து உடையது. காலை, மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான டிபன் இது.