முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
நறுமணப் பொருட்களின் ராஜா மிளகு!
By - சு.பொன்மணிஸ்ரீராமன், சென்னை. | Published On : 25th August 2021 06:00 AM | Last Updated : 25th August 2021 06:00 AM | அ+அ அ- |

நறுமணப் பொருட்கள் வாணிபத்தில் மிகவும் தொன்மையான பொருள்களுள் ஒன்று மிளகு. இது பூத்து, காய்த்து, படர்ந்து வளரும் கொடி வகையை சார்ந்தது.
மிளகு பழத்திற்காகவே வளர்க்கப்படுகிறது. இப்பழத்தில் ஒரே ஒரு விதை தான் இருக்கும்.
பழம் சிவப்பாகவும், உலர்ந்தப்பின் கருப்பாகவும் காணப்படும். இதனை கருப்புமிளகு என்றழைப்பர்..
காரத்திற்கும், மணத்திற்கும் சுவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மிளகு உடல்ஆரோக்கியத்திற்கும், சீரணத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
மிளகின் காரநெடியின் காரணி அதன் நடுவிலுள்ள காப்சாய்கின் என்னும் வேதிப்பொருளேயாகும்.
இது இதயநோய்களை கட்டுபடுத்துகிறது. ரத்தகுழாய்களை தூண்டிவிடுகிறது. கொழுப்பையும் மிகை ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கிறது.
அதோடுமட்டுமின்றி ரத்தகுழாய்கள் கடினமாவதையும் குறைக்கிறது.
உடலின் செல்களை பாதுகாத்து, வயதாவதைக் தடுக்கிறது.
வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப் பொருமலை குறைக்க உதவுகிறது.
நறுமணப்பொருள்களின் வாணிபத்தில் மிளகின் ஆதிக்கம் 25சதவீதம் இருப்பதால், நறுமணப்பொருள்களின் ராஜா என்று மிளகு போற்றப்படுகிறது.
கருப்பு மிளகு வாணிப சந்தையில், மதிப்புமிக்க பொருளாக கறுப்புத்தங்கமாகவே கருதப்படுகிறது.
ஐந்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பது பழமொழி. ஏனெனில் மிகச்சிறந்த நஞ்சுமுறிப்பான் மிளகு.
"நறுமணங்கள்' என்னும் புத்தகத்திலிருந்து.