அரிசியில் வண்டு வராமல் இருக்க...

கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.
அரிசியில் வண்டு வராமல் இருக்க...


கோதுமை மாவுடன் சம அளவு பார்லி மாவு கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகுந்த ருசியுடன் இருக்கும்.

பருப்பை வேக வைக்கும் போது 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு மிக விரைவில் வெந்து விடும்.

சப்பாத்தி மாவுடன் சிறிதளவு சமையல் சோடாவைச் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

உப்பை ஜாடியில் கொட்டும் போது 1 ஸ்பூன் மக்காச் சோளமாவைக் கலந்து வைத்தால் உப்பில் ஈரத்தன்மை உண்டாகாது.

குருமாவுக்கு அரைக்கும் போது மற்ற மசாலா பொருள்களுடன் தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா, கெட்டியான பதத்தில் வரும்.

சாம்பார், பருப்பு, கிழங்கு வகைகளில் செய்த உணவுகள் மற்றும் முட்டை உணவுகளை சமைத்த பின்னர் அதை ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீசரில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அந்தக் குழம்பின் சுவை தரம் மாறிவிடும்.

பப்பாளி காய் துண்டுகளை சர்க்கரை பாகில் நாள் கணக்கில் வைத்து விட்டு பின்பு அதை எடுத்து கேக், பன் போன்றவைகளில் சேர்த்து டூட்டி புருட்டி தயாரிக்கலாம்.

பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்தால்  சுவை கூடும்.

ஜாம்" தயாரிப்பதற்கு நன்றாகப் பழுத்த பழங்களை உபயோகிக்க வேண்டும். நன்றாக பழுத்த பழங்களை பயன்படுத்தாமல் இருந்தாலும், பழக்கூழை நன்றாக கொதிக்க விடாமல் ஜாம் தயாரித்தாலும் "ஜாம்" புளிப்புத் தன்மையாகிவிடும்.

தோசைக்கு அரைக்கும் போது உளுந்துடன் கொஞ்சம் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

தோசைக்கு அரைக்கும் போது அரிசியுடன் 1 ஸ்பூன் துவரம் பருப்பையும், 1 ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

அரிசியுடன் மஞ்சள் துண்டு, காய்ந்த வேப்பிலை அல்லது பூண்டு பற்களை கலந்து வைத்தால் அரிசியில் வண்டு வராது.

பச்சைப் பட்டாணியை வேகவைக்கும் போது அதில் 1 தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்தால் பட்டாணியின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com