ஒன்றரை மணிநேர அதிபர்!
By DIN | Published On : 02nd December 2021 06:52 PM | Last Updated : 02nd December 2021 06:52 PM | அ+அ அ- |

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நவம்பர் 20-ஆம் தேதி ஒன்றரை மணி நேரத்துக்கு மட்டும் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார்.
அமெரிக்காவில் அதிபராக இருப்பவருக்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது, மயக்கமருந்து செலுத்தி அவருக்கு மீண்டும் நினைவு திரும்புகிற வரை, அவருக்கு பதிலாக துணை அதிபருக்கு பணிமாற்றம் நடைபெறும். அந்தவகையில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஒன்றரை மணி நேரம் அதிபராக இருந்த முதல் பெண்மணி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற சிறப்பை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.