சப்போட்டா பழ டாஃபி
By எஸ்.பிரியம்வதா, சென்னை. | Published On : 26th December 2021 04:34 PM | Last Updated : 29th December 2021 06:13 PM | அ+அ அ- |

தேவையானவை:
சப்போட்டா - 500 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரி - 12 ( உடைத்தது)
செய்முறை:
பழத்தின் தோலை நீக்கிவிட்டு, விதைகளை எடுத்த பின்பு சிறிய துண்டுகளாக்க வேண்டும். பழத்துண்டுகளைக் குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை விட்டு வேக விடவும். அடுப்பில் அடி கனமான வாணலியில் வைத்து, நெய்விட்டு, பழக்கூழைக் குக்கரில் இருந்து எடுத்துப் போட்டு, கரண்டியால் நன்றாக மசிப்பதைப் போல கிளறவும். பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கிளறவும். நீர் வற்றியதும் வாணலியில் ஒட்டாமல் வரும் பக்குவத்தில் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரியை மேலே தூவி, ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவையான சப்போட்டா டாஃபி தயார்.