பேரழகி மோனிகா பெலுச்சி !

இன்று உலகில் பலகோடி ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழும் பேரழகி பெலுச்சிக்கு வயது 56.
பேரழகி மோனிகா பெலுச்சி !


இன்று உலகில் பலகோடி ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழும் பேரழகி பெலுச்சிக்கு வயது 56. அவர், சம்பாதிக்கும் பணம் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 73 ஆயிரம். உலகம் முழுக்க பலகோடி ரசிகர்களைக் கொண்ட பேரழகி மோனிகா பெலுச்சி, இத்தாலி நாட்டின் சிசிலியில் 1964- ஆம் ஆண்டு பிறந்தார்.

பதிமூன்று வயதில் மாடலிங் தொழிலுக்குள் காலடி எடுத்து வைத்த அவர்,

சினிமாவில் அறிமுகமானபோது வயது 27. அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவருக்கு அதிக புகழைப் பெற்று தந்த படம் மெலீனா அந்தப் படத்தின் கதை. இரண்டாம் உலகப்போர் காலத்தை அடிப்படையாக கொண்டு, இத்தாலியில் ஒரு சிற்றூரை கதைக்களமாகக் கொண்டு படம் தொடங்குகிறது. ஊருக்குள் புதிதாக ஒரு பேரழகி சிக்கென உடையில் நடந்து வருகிறார் அதைப்பார்த்து பலரும் கண் கொட்டாமல் பார்க்கிறார்கள்.

அவருடைய கணவன் போருக்கு சென்ற நிலையில் அவன் இறந்துவிட்ட தகவல் வருகிறது. அவர் அந்த ஊரில் தனியாக வசிக்கிறார்.

அந்தச் சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படை ஊருக்குள் நுழைகிறது. பேரழகி மெலினாவை அவர்கள் பார்த்துவிட, அதிகாரிகள் அவளை வசப்படுத்துகிறார்கள்.

ஒரு வழியாகப் போர் முடிந்து ஜெர்மன் ராணுவம் ஊரைவிட்டுக்கிளம்புகிறது. ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடி ஊருக்குக் களங்கம் உண்டாக்கிய மெலினாவை ஊரைவிட்டே வெளியேற்றுகிறார்கள்.

மேலும், சிலநாட்கள் கழித்து போரில் கொல்லப்பட்டதாக நினைத்த கணவன் உயிரோடு மனைவியைத் தேடி ஊருக்கு வருகிறான். அவளை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டே சென்று விடுகிறான்.

சில வருடங்கள் கழித்து பெரும் கோடீஸ்வரியாக அவள் அந்த ஊருக்குள் கணவனுடன் வருகிறான் ஊரே அவளை வாய்பிறந்து வேடிக்கை பார்க்கிறது. அவளை அடித்த பெண்களே அவளுக்கு சேவகம் செய்வதுடன் படம் நிறைவு பெறுகிறது. இதில் மெலினாவாக நடித்ததன் மூலம் மோனிகா பெலுச்சி உலகின் முன்னணி நடிகை ஆனார். பல கோடிகள் சம்பாதித்து ஒருதீவையே விலைக்கு வாங்கி அதில் பங்களாகட்டி, கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அதில் வசித்து வருகிறார்.

இன்றும் இணையத்தில் அதிகம் பேர் தேடும் உலக அழகி மெலினாவாக நடித்த மோனிகா பெலுச்சிதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com