எளிதில் மேக்கப் செய்ய சில டிப்ஸ்...

பொதுவாக  அநேக பெண்களுக்கு  மேக்கப் செய்வதற்கு  பல மணி  நேரங்கள் பிடிக்கும்.  இதனால் பல நிகழ்ச்சிகளுக்கு  தாமதமாகவே  செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எளிதில் மேக்கப் செய்ய சில டிப்ஸ்...

பொதுவாக அநேக பெண்களுக்கு மேக்கப் செய்வதற்கு பல மணி நேரங்கள் பிடிக்கும். இதனால் பல நிகழ்ச்சிகளுக்கு தாமதமாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். சீக்கிரமாக மேக்கப் போட சில டிப்ஸ்...

மேக்கப்புக்குரிய சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்திருங்கள். நீங்கள் அவசரமாக புறப்படும் நேரத்தில் ஐப்ரோ பென்சிலைத் தேடியும் லிப்ஸ்டிக்கைத் தேடியும் அலைந்தால் நேரம்தான் தாமதமாகும்.

எல்லா வகை பிரஷ்களையும் ஒரே கப்பில் போட்டு வைத்தால் இன்னொரு பெட்டியில் ஐப்ரோ பென்சில், ஐ - லைனர் பிரஷ், கண்மை போன்றவற்றையும் போட்டு வையுங்கள்.

லிப்ஸ்டிக் பேஸ் பவுண்டேஷன் பவுடர், பொட்டு போன்றவற்றைத் தனியாக ஒரு பெட்டியில் போட்டு வையுங்கள்.

பெண்கள் தங்கள் கூந்தலைப் பின்னுவதற்கே அதிக நேரத்தை செலவு செய்யாமல் விரைவாகச் செய்யக் கூடிய ஹேர்ஸ்டைலை முடிவு செய்து தயாராகலாம்.

முடியைப் பறக்க விடாதவாறு ஹேர் ஸ்டைல் செய்தால் தொந்தரவாக இருக்காது.

முகத்துக்கு மேக்கப் போட்ட பின்பே ஹேர்ஸ்டைல் செய்து கொண்டால் முக அழகுக்கு பொருத்தமாக இருக்கும். வியர்வை வந்தாலும் அழியாது.

உடையின் நிறம் ஐ ஷேடோ ஆகியவற்றுக்குப் பொருத்தமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளவேண்டும். பொட்டுக் குங்குமம்
அல்லது சாந்து, ஸ்டிக்கர் பயன்படுத்தலாம்.

புடவை, சுடிதார், மிடி டாப்ஸ் எதை அணிய வேண்டும் என்பதை முதல்நாள் இரவிலே தேர்ந்தெடுத்து வைத்துவிட வேண்டும். அந்த உடையையும் உடுத்தி விட்டால் உங்கள் வேலை முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com