உணவில் நெய் எடுத்துக் கொள்பவரா..  உஷார்!

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது.
உணவில் நெய் எடுத்துக் கொள்பவரா..  உஷார்!


அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. 

நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துகளும் கலந்திருக்கின்றன. 

ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இவையெல்லாம் ஆரோக்கியமானதாக இருந்தாலும்,  தினசரி நீங்கள்  உணவில் நெய் எடுத்துக் கொள்பவராக இருந்தால், எந்தெந்த வயதினர் எவ்வளவு நெய் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களின் சில பரிந்துரைகள் இதோ:

பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் 2 தேக்கரண்டி நெய் சாப்பிடலாம். 

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினமும் 3 தேக்கரண்டி நெய் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

7 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 முதல் 3 தேக்கரண்டி வரை நெய்யை உணவில் சேர்த்துக்கொடுக்கலாம். 

இதையடுத்து, 3 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதே அளவில் வழங்கலாம். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு 4 தேக்கரண்டி நெய்யும் கொடுக்கலாம். 

6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நெய் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com