கதம்பம்: உலக நாடுகளின் பெண் பாதுகாப்பு அமைச்சர்கள்!

காஷ்மீரைச் சேர்ந்த 25 வயதான ஆயிஷா அஜீஸ். 2011 -ஆம் ஆண்டில் தனது 15-ஆவது வயதில் மாணவர் விமானிக்கான உரிமம் பெற்றார்.
கதம்பம்: உலக நாடுகளின் பெண் பாதுகாப்பு அமைச்சர்கள்!

இளம் வயது விமானி!

காஷ்மீரைச் சேர்ந்த 25 வயதான ஆயிஷா அஜீஸ். 2011 -ஆம் ஆண்டில் தனது 15-ஆவது வயதில் மாணவர் விமானிக்கான உரிமம் பெற்றார். இதன்மூலம் இவர் நாட்டின் மிக இளம் வயது விமானி என்ற பெருமையைப் பெற்றார். அதன்பிறகு, சோகோல் விமான தளத்தில், மிக். 29 ரக ஜெட் விமானத்தில் பறப்பதற்கான பயிற்சி பெற்றார். பின்னர், 2017- இல் வர்த்தக ரீதியான விமானியாக உரிமம் பெற்றார்.

ஆயிஷா கூறுகையில், ""காஷ்மீர் பெண்கள் சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் சவாலான இந்த விமானி பணியை நான் விரும்பி ஏற்றுக் கொண்டேன். இதன் மூலம் புதிய இடங்களையும், பல்வேறான வானிலையையும், பலதரப்பட்ட மக்களையும் சந்திக்க வாய்ப்பாக இருக்கும். அதுபோன்று இது காலை 9 மணிக்கு சென்று மாலை 5 வீடு திரும்பும் பணியல்ல, சுமார் 200 பயணிகளை பத்திரமாக அழைத்துச் செல்லும் பொறுப்பு நமக்கு உள்ளது'' என்றார்.

- சுந்தரிகாந்தி

முதல் பெண் பிரதமர்!

வடகிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா பிரதமராக கஜாகலாஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 43 வயதாகும் அவர். அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜாகலாஸ் தலைமையிலான சீர்திருத்தக் கட்சியும், மையக் கட்சியும் ஒப்பந்தத்தின் கீழ் இருகட்சிகளும் கூட்டணி அரசை அமைத்துள்ளன. புதிய அமைச்சரவையில் இருகட்சிகளையும் சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக மையக் கட்சியின் ஜுரிரடாஸ் தலைமையிலான முந்தைய அரசு கவிழ்ந்தது குறிப்பிடதக்கது.


அவ்வையார் விருது பெற்ற கண்ணகி!


திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி. அங்குள்ள நகராட்சியின் எரிவாயு தகன மேடை பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இது தவிர, 350-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றுவதற்கு பெரும் பங்காற்றி உள்ளதோடு, மகளிர் சுய குழுக்களை அமைப்பதிலும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

இவரது தன்னலமற்ற சேவைகளுக்காக மாவட்ட அளவில், 2016- ஆம் ஆண்டின் மகளிர்தின விருது, 2018-ஆம் ஆண்டுக்கான குடியரசு தின விருது, மண் கழிவுகள் மேலாண்மைக்காக 2018-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

உலக நாடுகளின் பெண் பாதுகாப்பு அமைச்சர்கள்!

பிரான்ஸ் - புளாரன்ஸ் பார்லி - ஜுன் 21, 2016 முதல்
ஸ்பெய்ன் - மரியா டோலரஸ் டி காஸ்டெஸ் - நவம்பர் 4, 2016 முதல்
ஆஸ்திரேலியா - மாரிஸ்பேன் - செப் 21, 2015 முதல்
ஸ்லோவேனியா - ஆண்ட்ரஜா காட்டிக் - மே13, 2015 முதல்
இத்தாலி - ராபர்டா பினோட்டி - பிப்ரவரி 22, 2014 முதல்
ஜெர்மனி - உர்சுலா வோன் டெர் லேயன் - டிசம்பர் 17, 2013 முதல்
நார்வே - இனிமாரி எரிக்சன் சோரெய்யெய் - அக்டோபர் 16, 2013 முதல்
கென்யா - ரேச்சல் ஓமமோ - மே 15, 2013 முதல்
நெதர்லாந்து - ஜீனின் ஹெனிஸ் பிளாஸ் சாரட் - நவம்பர் 3, 2012 முதல்
தென் ஆப்பிரிக்கா - நோஸிவைவ் மாப்பிசா , குவாகுவா - மே 26, 2014 முதல்
இவர்களுடன் ஷேக் ஹஸீனா- வங்காள தேசம், மார்த்தா ஆலேனா லூயிஸ் செவில்லா - நிகரகுவா, மிமிகோதாலி - அல்பேனியா, மரினா பெண்டஸ் - போஸ்னியா மற்றும் ஹெர்சேகோவினா, மட்மிலா சேகரின்ஸ்கா - மாசிடோனிய குடியரசு ஆகியோரும் அடங்குவர்.

- கோட்டாறு. ஆ.கோலப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com