உப்பில் நீர் கசியாமல் இருக்க...

விரலில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு, கத்தரிக்காய் நறுக்கினால் கறைபடியாது.
உப்பில் நீர் கசியாமல் இருக்க...

விரலில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு, கத்தரிக்காய் நறுக்கினால் கறைபடியாது.

*பிளாஸ்டிக் ஷீட் போட்டு அதன் மேல் உப்பைக் கொட்டி வைத்தால் உப்பு கசிந்து நீராகாது .

*அடைக்கு அரைக்கும்போது சிறிது ஜவ்வரிசி, சிறிது ஊறிய கோதுமையை அடை மாவுடன் அரைத்தால் அடை  மொறு மொறுப்புடன் டேஸ்ட்டாக இருக்கும்.

*ரசம் செய்யும்போது சிறிது முருங்கை இலை சேர்த்தால் ரசம் மணமுடன் இருக்கும்.

*புளிக்குழம்பு செய்யும்போது கால் தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவை அள்ளும்.

*பிரட் காய்ந்து விட்டால் இட்லி பாத்திரத்தின் ஆவியில் சில நிமிடம் வைத்து எடுத்தால் சாஃப்ட்டாகி விடும்.

* கோகோ போன்ற பானங்களில் சிறிது உப்பு சேர்த்தால் சுவை கூடும்.

*துவரம்பருப்பை வேகவைக்கும்போது தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கி அதில் போட்டால் விரைவில் வெந்து விடும். வெண்ணெய்ப் போல் குழைவாகவும் இருக்கும்.

*தக்காளி பழுக்காமல் காயாக இருந்தால் அதை ஒரு பாலிதீன் பையில் போட்டு கட்டி வைத்தால் மறுநாள் நன்றாகப் பழுத்து விடும்.

*வெந்தயக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலவீனம் போய் பலம் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வெந்தயக் கீரையைச் சாறாக்கி அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com