சமையல் சமையல்!

சிவப்பரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
சமையல் சமையல்!

சிவப்பரிசி ஆப்பம்


தேவையானவை:
சிவப்பரிசி, பச்சரிசி - தலா 200 கிராம்
உளுந்தம்பருப்பு - ஒரு கைப்பிடி
வெந்தயம் -2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: சிவப்பரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸôக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன.


முளைகட்டிய பயறு கொழுக்கட்டை

தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - 200 கிராம்
முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் (அ) பல்லு பல்லாகக்
கீறிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு கிண்ணம்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். மேலே கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கொழுக்கட்டை மாவுடன் வதக்கிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிறகு மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான பயறு கொழுக்கட்டை ரெடி.

குறிப்பு: இடியாப்ப மாவு (அ) சிவப்பரிசி புட்டு மாவிலும் தயாரிக்கலாம்.


சிவப்பரிசிக் கஞ்சி


தேவையானவை:
சிவப்பரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய், தக்காளி - தலா 1
இஞ்சி - பூண்டு விழுது - 1தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
வெந்தயம், சீரகம் - தலா அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கேற்ப

செய்முறை: வெறும் வாணலியில் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சன்ன ரவையாக உடைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தேங்காய்த் துருவல், கொத்துமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.



மொசுமொசு அவரைக் கறி

தேவையானவை:
மொசுமொசு அவரை - கால் கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு (வட்டமாக நறுக்கவும்)
பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்)
சாம்பார் பொடி - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் -ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய அவரைக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
குறிப்பு: மொசுமொசு அவரை மருத்துவக் குணம் கொண்டது. இந்த அவரைக்காய் கிடைக்காதவர்கள் சாதாரண அவரைக்காயிலும் இதேபோல் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com