குளிர்கால நோய் தொற்றை சமாளிக்க...

பனிக்காலத்தில்  இனிப்பு  நிறைய சாப்பிடக் கூடாது.
குளிர்கால நோய் தொற்றை சமாளிக்க...

பனிக்காலத்தில்  இனிப்பு  நிறைய சாப்பிடக் கூடாது.

 வெதுவெதுப்பான  தண்ணீர்  குடிக்க வேண்டும்.
 மாலை நேரங்களில்  காலில்  சாக்ஸ்  அல்லது  செருப்பு  அணிந்தே  வீட்டிலும், வெளியிலும்  நடமாட வேண்டும்.
 குளிர்பானங்கள்,  ஐஸ்க்ரீம் தவிர்க்க வேண்டும்.
 மூச்சுப் பயிற்சி,  ஆவிபிடித்தல்  இவைகளை  மறக்கக்கூடாது.  
 வெந்நீரில்  கல்உப்பு  போட்டு  இருவேளை  வாயை  கொப்பளிப்பது நல்லது.
 இரவில்  சூடான பாலில்  மஞ்சள்பொடி,  பனங்கற்கண்டு, மிளகுப் பொடி  சேர்த்து குடிக்க வேண்டும்.
 தேனுடன்  மிளகுப்பொடி  சேர்த்து  சாப்பிட்டால்  இருமல்  சளி வராது.
 பனிக்காலத்தில்  கை, கால்களை  வெந்நீரில் மஞ்சள் பொடி,  வேப்பிலை போட்டு வைத்து கழுவ வேண்டும்.
 வேப்பிலையை வீட்டில்  ஆங்காங்கே  வாசல் முதல் பின்புறம் வரை கட்டி  தொங்கவிட்டால்  பனிக்கால நோய்கள்  அண்டாது.  
 சமையலில்  சுக்கு,  சீரகம், மிளகு, ஓமம்  அன்றாடம்  சேர்த்துக் கொண்டால் நன்மைத் தரும்.
 இரவில் தாமதமாக உணவை  உட்கொள்ளக் கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com