பீங்கான் கப்பில் படிந்துள்ள கறையைப் போக்க..

சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
பீங்கான் கப்பில் படிந்துள்ள கறையைப் போக்க..


சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊற வைத்தால் பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

ஓமப்போடி போன்றவற்றுக்கு மிக்ஸியில் கொஞ்சமாக ஓமம் அரைக்க முடியாது. அதற்குப் பதிலாக ஓமவாட்டர் சேர்த்தால் முறுக்கு அச்சில் அடைத்துக் கொள்ளாமல் சுலபமாக பிழிய வரும். வாசனையும் தூக்கலாக இருக்கும்.

ஜவ்வரிசி அல்லது அரிசிக் கூழ் கிளறும்போது, கசகசாவை ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் போட்டால், பொறிக்கும்போது தனி மணமும், ருசியும் கிடைக்கும்.

தோசை வார்ப்பதற்கு முன்பு தோசைக்கல்லில் ஒரு துண்டு பெருங்காயத்தை நுணுக்கிப் போட்டு, சிறிது எண்ணெய்விட்டு வறுத்தபிறகு தோசை வார்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.

காபி, டீ குடிக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்ததால் அடிப்பாகம் வீணாகி இருந்தால், இஸ்த்திரி பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேய்த்தால் பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com