மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - பாஜக அமோக வெற்றி!போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்!

பிரியாணி இலைக்கு லவங்கபத்திரி, பிரிஞ்சி இலை, பட்டை இலை என வேறு பெயர்களும் உள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2021, 4:42 pm IST

பிரியாணி இலைக்கு லவங்கபத்திரி, பிரிஞ்சி இலை, பட்டை இலை என வேறு பெயர்களும் உள்ளது.

பிரியாணி இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பிரியாணி இலையில் உள்ள மருத்துவக் குணங்களை கீழே காணலாம்.

*பிரிஞ்சி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கை, கால், மூட்டு வலிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தலைவலியின் போது இந்த எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்தால் தலைவலி உடனே சரியாகி
விடும்.

*பிரியாணி இலையில் உள்ள என்சைம்ஸ் என்ற புரதப் பொருள் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகிறது. 

* பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்னைகள் மற்றும் சிறுநீரக கற்களை சரி செய்யும்.   மேலும்,  இந்த நீரை குடிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

*பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் நல்ல அமைதியான தூக்கம் கிடைக்கும். 

*பிரியாணி இலையை டீயில் சேர்த்து குடித்து வந்தால், மலச்சிக்கல், குடலியக்க பிரச்னைகள் குணமாகும்.

* டைப்- 2 நீரிழிவு நோயாளிகள் பிரியாணி இலையை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.