அன்னாசிப்பூவின் அற்புதம்!

அன்னாசிப் பூ இந்தியா முழுவதும் கிடைக்கும் ஒரு பொருள். இதன் தாயகம் சீனா.
அன்னாசிப்பூவின் அற்புதம்!


அன்னாசிப் பூ இந்தியா முழுவதும் கிடைக்கும் ஒரு பொருள். இதன் தாயகம் சீனா. இன்று எல்லா நாடுகளுக்கும் பரவி தற்போது தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறிவிட்டது. அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. அன்னாசிப்பூவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின்- ஏ வைட்டமின்-சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன:

இனிப்பு சுவையுடைய அன்னாசி பூ சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க வைக்கும். இதன் இதழ்கள் நட்சத்திரம் போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும். பசியின்றி அவதிப்படுபவர்களுக்கு பசியை தூண்ட இது நல்ல மருந்து. பசிக்கவில்லை, சாப்பாடு வேண்டாம், உணவை கடமைக்கு சாப்பிடுபவர்களுக்கு இதை சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.

வாயுக்கோளாறு பிரச்னைகளை தீர்க்கும் தன்மையுடையது. இந்த வாயுக்களின் சீற்றத்தால் வயிற்றுப் பகுதியில் ஒருவித மந்தத்தன்மை ஏற்படும். இந்த நிலை மாறி நன்கு பசியைத் தூண்ட தினமும் உணவில் அன்னாசிப் பூவை சேர்த்துக் கொண்டால் வாயுக்களின் சீற்றத்தைக் குறைத்து நன்கு பசியைத் தூண்டும்.
அன்னாசி பூ எண்ணெய்:

அன்னாசி பூவில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும அலர்ஜியை சரி செய்கிறது. நரம்புகளை வலுவாக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது.

புளித்த ஏப்பம்:

சிலருக்கு சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் புளித்த ஏப்பம் ஏற்படும். இந்த பிரச்னைக்கு அன்னாசி பூ நல்ல மருந்தாக பயன்படுகிறது. அன்னாசிப்பூவை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து மூன்று வேளையும் உணவிற்கு பிறகு குடித்து வந்தால் புளித்த ஏப்பம் நீங்கும்.

சளி இருமல்:

அன்னாசிப்பூவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சீரகம், மிளகு, அரை தேக்கரண்டி அன்னாசிப்பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து காலையும் மாலையும் குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் விரைவில் குணமாகும்.

தசை வலி:

விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் இரண்டிலும் தலா 100 மில்லி அளவு எடுத்து அதில் அன்னாசி பூ பொடியை கலந்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசை வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் தசை வலி, தசைப்பிடிப்பு குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com