ஐம்பது  குழந்தைகளைத் தத்தெடுத்த மும்பை பெண் காவலர்..!

மும்பை நகர பெண் காவலரான  ரெஹானா ஷேக்., கரோனா காலத்தில்  50 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஐம்பது  குழந்தைகளைத் தத்தெடுத்த மும்பை பெண் காவலர்..!

மும்பை நகர பெண் காவலரான ரெஹானா ஷேக்., கரோனா காலத்தில் 50 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

""மகாராஷ்டிரா ரெய்காட் மாவட்டத்தில் ஒரு பள்ளியின் ஆதரவற்ற குழந்தைகளின் அவல நிலைமை குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்து அங்கு சென்றேன். அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு கால்களில் அணிய செருப்பு கூட இல்லை என்பதை அறிந்தேன். உடனே அவர்களுக்கு செருப்புகள் வாங்கிக் கொடுத்தேன். அந்தக் குழந்தைகள் பத்தாம் வகுப்பு படிக்கும்வரை ஆகும் கல்விச் செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். எனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சேமித்த பணத்தையும், பண்டிகை காலத்தில் செலவு செய்ய சேமித்து வைத்த தொகையையும் ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்காக ஒதுக்கிவிட்டேன்.

இரண்டு ஆண்டுகளாக மும்பையில் கரோனா தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், மருத்துவமனைகளில் படுக்கை ஆக்ஸிஜன், ஊசி மருந்துகள் கிடைக்காமலும் தவித்து வந்தவர்களுக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் வாங்கிக் கொடுத்தேன். ஊசி மருந்து கிடைக்காதவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நேரத்தில் ஊசி மருந்துகள் கிடைக்கச் செய்தேன். பல ஆண்டுகளாக ரத்த தானம் செய்து வரும் நான், கரோனா காலத்தில் ரத்த தானம். கரோனா நோயாளிக்களுக்கான பிளாஸ்மா தானமும் பெற்றுத் தந்துள்ளேன். எனது சமூக சேவைகளைத் புரிந்து கொண்ட எனது பதினைந்து வயதான மகள், பண்டிகைக் காலத்தில் கிடைத்த அன்பளிப்புத் தொகைகளையும், சேமிப்புகளையும் பிறருக்கு உதவ என்னிடம் கொடுத்துவிட்டாள்'' என்று சொல்லும் ரெஹானா ஷேக்கை மும்பை போலீஸ் சென்ற ஆண்டு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி கௌரவித்தாலும் தொடர்ந்து சமூக சேவை செய்து வருவதால் மீண்டும் அவருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான விருது வழங்கி பாராட்டியுள்ளார்கள்.

ரெஹானா ஷேக்கிற்கு 40 வயதாகிறது. கணவர் நசீரும் காவலராகப் பணி புரிகிறார். அப்பா ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவர்களது குடும்பத்தில் பெரியவர்கள், குழந்தைகள் என ஆறு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். குடும்பப் பொறுப்பையும் கவனித்துக் கொண்டு ரெஹானா ஷேக், தனது சமூக சேவைகளையும் செய்து வருகிறார். ரெஹானா ஷேக். சமீபத்தில் உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com