பேபி கார்ன் மஞ்சூரியன் 

பேபி கார்னை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பேபி கார்ன் மஞ்சூரியன் 

தேவையானவை: 

பேபிகார்ன் - 10 (துண்டுகளாக்கப்பட்டது)
சோள மாவு - 2 தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் -  அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
குடைமிளகாய் - 1 
பூண்டு - 10 பல் 
பெரிய வெங்காயம் - 1 
சோயா சாஸ் - அரை தேக்கரண்டி 
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
சில்லிசாஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:  

பேபி கார்னை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  ஒரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், உப்பு மற்றும் வேக வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு  வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள பேபி கார்னை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
பிறகு அதே வாணலியில் 1தேக்கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட வேண்டும். 
அடுத்து அதில் சோயா சாஸ் சேர்த்து  நன்கு கிளறி விட வேண்டும். பிறகு தீயை குறைத்து, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது தண்ணீர் தெளித்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள பேபி கார்னை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பேபி கார்ன் மஞ்சூரியன் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com