பேபி கார்ன் மசாலா நூடுல்ஸ் 

பேபிகார்னை துண்டுகளாக  நறுக்கி  வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  நூடுல்ûஸ  வேக வைத்து  நீர்  வடித்து வைத்துக் கொள்ளவும்.
பேபி கார்ன் மசாலா நூடுல்ஸ் 

தேவையானவை:

நூடுல்ஸ் - 2 பாக்கெட்
பேபி கார்ன் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 1
காப்சிகம் - 1
பச்சை மிளகாய் - 2
காரட் , பீன்ஸ் - தேவைப்பட்டால்
மசாலா:
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயத்தாள் - சிறிது


செய்முறை:

பேபிகார்னை துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நூடுல்ûஸ வேக வைத்து நீர் வடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த பேபி கார்னை சேர்த்து வதக்கவும். துண்டுகளாக நறுக்கிய காப்சிகம் சேர்த்து வதக்கவும். இந்த சமயத்தில் தான் காரட், பீன்ஸ் சேர்க்க நினைத்தால் அதனையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்னர், மசாலா பொருள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும். அனைத்தும் நன்கு வதங்கியதும், வேக வைத்த நூடுல்ûஸ சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், நறுக்கிய வெங்காயத் தாளை சேர்த்து கிளறி பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com