நாகாக்களின்  ராணி!

மணிப்பூரிலுள்ள நங்கோ என்ற கிராமத் தலைவர் மகளாய்ப் பிறந்தார் கெய்டின்லியூ. வங்காளத்தில் ஆங்கிலேயருக்கு எதிராய் தீவிரவாத இயக்கம் பரவி வந்தபோது, அது மணிப்பூர், நாகலாந்து பகுதிகளுக்கும் பரவியது.
நாகாக்களின்  ராணி!

மணிப்பூரிலுள்ள நங்கோ என்ற கிராமத் தலைவரான லோதோநாங் என்பவரின் மகளாய்ப் பிறந்தார் கெய்டின்லியூ. வங்காளத்தில் ஆங்கிலேயருக்கு எதிராய் தீவிரவாத இயக்கம் பரவி வந்தபோது, அது மணிப்பூர், நாகலாந்து பகுதிகளுக்கும் பரவியது. கொரில்லாப் போர் முறையில் வெள்ளையரைக் கொன்று வந்த தீவிரவாதக் கும்பல் ஒன்றின் தலைவன் ஜடோநாங். தேசிய உணர்வு பெற்ற கெய்டின்லியூவும் தனது 13- ஆவது வயதில் அந்த தீவிரவாதக் குழுவில் சேர்ந்து குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்ற போர்ப்பயிற்சி பெற்றார். 1931- இல் ஜடோநாங்கை ஆங்கிலேயர் சிறைப்பிடித்து, தூக்கிலிட்டுக் கொன்றனர். அதன்பின், கெய்டின்லியூ அந்த தலைமறைவு இயக்கத்திற்கு தலைமை ஏற்றார். 'நாட்டு விடுதலையே நம் இலக்கு' என்று போராட்டத்தைக் தீவிரமாக நடத்தி வந்தார். ட்ரான்ஸ் பாரக் பேசின் என்ற மலைப்பள்ளத்தாக்கில் மறைந்திருந்து அக்குழு செயல்பட்டது. இறுதியில், 1932 அக்டோபர் 17 -ஆம் தேதி அவர்கள் மறைவிடத்தைக் கண்டுபிடித்து கெய்டின்லியூவையும் மற்ற உறுப்பினர்களையும் சுற்றிவளைத்துப் பிடித்தது.

கெய்டின்லியூ ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 1947-இல் நாடு விடுதலையடைந்த போதுதான் "நாகாக்களின் ராணி' என்று அம்மக்களால் பெருமிதத்துடன் அழைக்கப்பட்ட, புரட்சி வீராங்கனையான கெய்டின்லியூவுக்கும் விடுதலை கிடைத்தது.

(கிளமெண்ட் ஈசுவர் எழுதிய முதன்மைப் பெண்டிர் என்ற நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com