நாடக மேடையில் பிறந்த நடிகை!

புதிதாக மேடையில் ஒருவர் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தும் போது, ஒரு புதிய கலைஞர் பிறந்து விட்டார் என்பார்கள்.
நாடக மேடையில் பிறந்த நடிகை!


புதிதாக மேடையில் ஒருவர் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தும் போது, ஒரு புதிய கலைஞர் பிறந்து விட்டார் என்பார்கள். ஆனால், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை சுரபி கமலாபாய், நிஜமாகவே மேடையில் பிறந்தவர்.

1913-ஆம் ஆண்டில், ஆந்திராவின் ஒரு சிறுநகரத்தில் மேடை நாடகம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த நாடகத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

அவசரமாக திரைகள் கீழிறக்கப்பட்டு, தாதிப் பெண் ஒருவர் பிரசவத்தைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டார். நாடகத்தை கண்டுகளித்து கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் படபடக்கும் இதயத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதனால், மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்தக் குழந்தை நோக்கி பணமழை பொழிந்தார்கள்.

நாடக மேடையிலேயே பிறந்த அக்குழந்தை வளர்ந்து, பிற்காலத்தில் பிரபல
நடிகை ஆனது. அவர்தான் சுரபிகமலாபாய்.

மேடையில் முதன் முதலாய் தோன்றியபோது, அதாவது பிறந்தபோது, பார்வையாளர்களின் பரிசு மழையில் நனைந்த அவருக்கு அப்போது கிடைத்த தொகை ரூபாய் 50. அக்காலத்தில் அது பெரிய தொகை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com