பருப்பு, பச்சை மிளகாய்த்  தொக்கு 

துவரம் பருப்பு சுத்தம் செய்து வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 பருப்பு, பச்சை மிளகாய்த்  தொக்கு 


தேவையானவை:

துவரம் பருப்பு - 150 கிராம்
பச்சை மிளகாய் - 150 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 2
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பு சுத்தம் செய்து வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். புளிக்கரைசலைச் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து கொட்டவும். கடைசியில் கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com