குடியுரிமையின் தாய்!

"கறுப்பு வைரம்' என்றும் "குடியுரிமையின் தாய்' என்றும் போற்றப்படும் ரோஸா பார்க்ஸ் கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் பாடுபட்ட முதல் பெண்மணி.
குடியுரிமையின் தாய்!


"கறுப்பு வைரம்' என்றும் "குடியுரிமையின் தாய்' என்றும் போற்றப்படும் ரோஸா பார்க்ஸ் கறுப்பின மக்களின் குடியுரிமைக்காகப் பாடுபட்ட முதல் பெண்மணி. பேருந்தில் வெள்ளையருக்கு இடம் அளிக்க மறுத்ததற்காக நீதிமன்ற வழக்கைச் சந்தித்தவர். வழக்கு விசாரணைக்கு வந்த டிசம்பர் 5-ஆம் நாள் மார்டின் லூதர்கிங் போன்றவர்களின் அறைகூவலால் கறுப்பின மக்கள் பேருந்துப் புறக்கணிப்புப் செய்து 381 நாள்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப்பினால் கறுப்பின மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான பிப்ரவரி 4-ஆம் தேதியை கலிஃபோர்னியா, மிஸிஸிசிப்பி ஆகிய மாநிலங்களிலும். டிசம்பர் முதலாம் நாளை ஓகையோ, ஓரிகான் ஆகிய மாநிலங்களிலும் ரோஸா பார்க்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

(பானுமதி தருமராசன் எழுதிய "வரலாறு படைத்த வைரமங்கையர்'நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com