உலர் திராட்சையில் உள்ள நன்மைகள்!

உலர் திராட்சையில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது.
உலர் திராட்சையில் உள்ள நன்மைகள்!

உலர் திராட்சையில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலங்களில் ரத்தத்தில் உள்ள PH மதிப்பினை அதிகரிக்க  உலர் திராட்சையினை நீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறந்த மாற்றத்தைப் பெறலாம். மேலும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்தப் போக்கினை ஈடுகட்டச் செய்வதிலும் உலர் திராட்சை முக்கிய பங்காற்றுகின்றது.

✫ தலை முடி கொட்டுதல் பிரச்னை இருப்பவர்கள் உலர் திராட்சையினை காலை மாலை என இருவேளை 10 என்ற அளவில் சாப்பிட்டு வந்தால் தலையின் ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி கொட்டுவது சரியாவதோடு, புதிதாக முடி வளரவும் செய்யும்.

✫ குழந்தைகளுக்கு  2 வயதில் இருந்து கொடுக்கத் துவங்கலாம். உலர் திராட்சையினை அப்படியே சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பாலில் ஊறவைத்து அரைத்துக் கொடுக்கலாம்.

✫ முதியவர்கள்  உலர் திராட்சையினை ஜூஸாக எடுத்துக் கொண்டால் உடல்
நலம் பெறுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com