சமையல் டிப்ஸ்...

இட்லி தோசைக்கு  உளுத்தம் பருப்பு அரைக்கும்போது  கொஞ்சம்  பெருங்காயப் பொடியைச் சேர்த்து  அரைத்தால்  கமகமவென்று  மணமாக இருக்கும்.
சமையல் டிப்ஸ்...

இட்லி தோசைக்கு  உளுத்தம் பருப்பு அரைக்கும்போது  கொஞ்சம்  பெருங்காயப் பொடியைச் சேர்த்து  அரைத்தால்  கமகமவென்று  மணமாக இருக்கும்.

✦கறிவேப்பிலைத் துவையலுக்கு  உளுத்தம் பருப்புக்கு  பதில்  வேர்க்கடலையை  வறுத்து  அரையுங்கள். துவையல்  மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

✦சாம்பார்,  வற்றல் குழம்பு  ஆகியவற்றில்  காரம்  அதிகமாகிவிட்டால்  நல்லெண்ணெய்யை  ஊற்றி  கொஞ்சம்  கொதிக்க
விடுங்கள்,  காரம் குறைந்துவிடும்.

✦ஆவிவரும் வரை சூடாக்கி பின்னர்  குளிரவிட்ட எண்ணெய்யில்  ஊறுகாய்  போட்டால்  எளிதில்  பூஞ்சணம் பிடிக்காது.

✦வாழைக்காயைப்  ப்ரிட்ஜில்  வைக்கும்போது  அப்படியே  வைக்காமல்  இரண்டாக  நறுக்கி  வைத்தால் கறுக்காமல் அப்படியே  புதிது போல் இருக்கும்.

✦மசால்வடை  செய்யும்போது மாவு நீர்த்துப் போய்விட்டால்  இரண்டு  பிரெட்  துண்டுகளை  மிக்சியில்  பொடித்து,  மாவுடன் சேர்த்து  வடைதட்டினால்  வடை ருசி பிரமாதமாக இருக்கும்.

✦பூரிக்கிழங்கு  செய்யும்போது  அதில்  பொட்டுக்கடலையோடு  சோம்பு  சேர்த்து  அரைத்துக் கலந்தால்  அதன்  சுவையே  அலாதிதான்.

✦ரவா தோசை  மாவில்  ஒரு தேக்கரண்டி  நல்லெண்ணெய் சேர்த்தால்  தோசை  மொறு மொறுவென்று  சுவையாக இருக்கும்.

✦புதினா சட்னி  செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  தேங்காய்த் துருவலும், சிறிதளவு  வேர்க்கடலையும்  சேர்த்து  அரைத்தால்  சட்னி  சுவையாக இருக்கும்.

✦இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்த்தால் கூடுதல் சுவையாக 
இருக்கும்.

✦உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

✦வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் பாத்திரத்தில் வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் சேர்த்து இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

✦சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

✦உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். 

✦ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் ருசியாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com