உளுந்து வடை மொறு மொறுப்பாக இருக்க..!

வெங்காய  ஊத்தப்பம் செய்யும்போது  தோசையில் நடுப்பகுதியில் எண்ணெய்  ஊற்றினால் விரைவில்  வெந்துவிடும்.
உளுந்து வடை மொறு மொறுப்பாக இருக்க..!

➜வெங்காய  ஊத்தப்பம் செய்யும்போது  தோசையில் நடுப்பகுதியில் எண்ணெய்  ஊற்றினால் விரைவில்  வெந்துவிடும்.
➜சப்பாத்திக்கு மாவு பிசையும்போது  பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து  பிசைந்தால்  சப்பாத்தி  மிருதுவாக  இருக்கும்.
➜திடீர்  உப்புமா  செய்ய ரவை  இல்லையா  ரவைக்கு  பதிலாக  அவலை  நன்கு வறுத்து  சுடு தண்ணீரில்  போட்டு எடுத்து  அவல் உப்புமா  செய்யலாம்.
➜முள்ளங்கியை  இடித்துச் சாறெடுத்து  ஒரு தம்ளர்  அருந்திவர  சிறுநீரக  நோய்கள்  குணமாகும்.
➜பாலில்  வெங்காயம்,  பூண்டு சேர்த்து  வேகவிட்டு  அந்தப் பாலைப் பருகி வர நெஞ்சில்  சேர்ந்துள்ள  சளி நீங்கிவிடும்.
➜முருங்கைக் கீரையை போட்டு  மிளகு  ரசம் வைத்துச் சாப்பிட்டால் கை,  கால்  வலிகள் நீங்கும்.
➜புதினா, கொத்துமல்லி,  பச்சை
மிளகாய்,  இஞ்சி சேர்த்து  அரைத்து அதனுடன் சிறிது  எலுமிச்சைச் சாறு   கலந்து  சுண்டலில் சேர்க்க மாறுபட்ட சுவை இருக்கும்.
➜ஆரஞ்சுப் பழத்தோல் , பச்சை மிளகாய்  இரண்டையும்  நறுக்கி  எண்ணெய்யில்  வதக்கி வத்தல்  குழம்பு   செய்தால்  அதன் சுவையே  அலாதிதான்.
➜தேன்குழல்,  முறுக்கு  செய்யும்போது தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால்  சுவை கூடுதலாக இருக்கும்.
➜வெங்காயப் பக்கோடா  செய்ய மாவு பிசையும்போது  வறுத்த  நிலக்
கடலையைப் பொடி  செய்து  மாவுடன்  சேர்த்துப் பிசைந்து  பக்கோடா செய்தால் மொறு மொறு வென்று  ருசியாக இருக்கும்.
➜முறுக்கு, தட்டை  செய்யும்போது  மாவுடன்  தேங்காய்   எண்ணெய் விட்டுப் பிசைந்து  செய்தால்  வேறு எண்ணெய்யில் சுட்டாலும்  தேங்காய் எண்ணெய்யில்  செய்தது போல வாசனையாக இருக்கும்.
➜உளுந்து  வடை செய்யும்போது  மாவில்  சிறிதளவு  சேமியாவைத் தூள் செய்து  போட்டு வடை செய்தால்  வடை மொறு மொறுப்பாக  இருக்கும்.
➜கோதுமை மாவுடன்  சிறிது ரவை சேர்த்துப் பிசைந்து  பூரி செய்தால்  பூரி எத்தனை நேரமானாலும்  மொறு மொறுப்புடன்  உப்பலாக  இருக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன், அலுவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com