தேவையானவை:
பால் - 2 டம்ளர்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
கிராம்பு - 1
மிளகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
மிளகு, கிராம்பை லேசாக வறுத்து ஆறியதும் கரகரப்பாக பொடிக்கவும். பின்னர், பாலில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பால் கொதித்து வந்ததும் அத்துடன் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து நன்கு காய்ச்சி ஒன்றரை டம்ளராக வற்றவிடவும்.
பின்னர், சர்க்கரை, மஞ்சள் பொடி சேர்த்து வடிகட்டி சூடாக குடிக்கவும். சுடச்சுட மிளகுப் பால் தயார்.