ரவா தோசை சுவையாக இருக்க...

வினிகர் சேர்த்து கலந்து எண்ணெய் பாத்திரங்கள் போட்டு 2 மணி நேரம் கழித்து கழுவினால் சுலபமாக இருக்கும்.
ரவா தோசை சுவையாக இருக்க...
ரவா தோசை சுவையாக இருக்க...

எண்ணெய் பாத்திரங்கள் கழுவ கஷ்டமாக உள்ளதா ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா, 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் மற்றும் 1 மூடி எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து கலந்து எண்ணெய் பாத்திரங்கள் போட்டு 2 மணி நேரம் கழித்து கழுவினால் சுலபமாக இருக்கும்.

இரும்பு வாணலியில் உள்ள துருவை நீக்க வெங்காயத்தை தோலோடு நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில்  தேய்த்து கழுவினால் துரு நீங்கி விடும். 

குருமா, சால்னா போன்ற கிரேவிகளுக்கு காரம் அதிகமாகி விட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 1/2 கப் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

 ரவா தோசைக்கு மாவு கரைக்கும் போது 2 கரண்டி தோசை மாவு சேர்த்து கரைத்தால் தோசை ருசியாக இருக்கும். 

 உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய் ரோஸ்ட் செய்யும் போது சிறிது அரிசி மாவு தூவி வறுத்தால் மொறு மொறுப்பான ரோஸ்ட் ரெடி.

 வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை தோலோடு வட்டமாக நறுக்கி பின் தோலைப் பிரித்து கொள்ளுங்கள். வடிவம் மாறாமல் வட்டமாக இருக்கும். 

 பிரியாணிக்கு தயிர் பச்சடி செய்யும் போது வெங்காயத்தை மெலிதாக அரிந்து சிறிது உப்பு கலந்து பிசறி வைக்கவும். 20 நிமிடங்களுக்கு பின் கைகளால் பிழிந்து கெட்டியான தயிரில் கலந்தால் சுவையாக இருக்கும்.

 பனீர் பட்டர் மசாலா போன்ற கிரேவிக்களுக்கு ஃபிரெஷ் கீரீமுக்கு பதிலாக 2 தேக்கரண்டி  மக்காச்சோள மாவை 1/4 கப் பாலில் கலந்து கடைசியில் சேர்க்கலாம். 

 சாதத்திற்கு அரிசியை இரண்டு முறை கழுவிய பின் 30 நிமிடங்கள் ஊறவைத்து வேக வைத்தால் ஒட்டாமல் உதிரியாக இருக்கும். கழுவுவதற்கு முன் ஊறவைத்தால் சாதம் சீக்கிரம் குழைந்து விடும்.

 ஃபரைட் ரைஸ் செய்வதற்கு வடித்த சாதத்தை அகலமான தட்டில் ஆறவைத்து ஒரு வெள்ளைத் துணியால் இரண்டு மணி நேரம் மூடி வைத்து ஆறவைத்து ஃபரைட் ரைஸ் செய்து பாருங்கள் உதிரி உதிரியாக சாதம் ஒட்டாமல் இருக்கும். 

தேங்காய் சட்னி செய்யும் போது தேங்காய்த் துருவல், 1 பச்சை மிளகாய் மற்றும் 2 தேக்கரண்டி உடைத்த முந்திரி சேர்த்து அரைத்து பாருங்கள் ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி தயார்.

 அவியல் செய்யும் போது தேங்காயோடு  சிறிய  துண்டு ஊறவைத்த புளி சேர்த்து அரைத்தால் அவியல் சுவையாக இருக்கும். 

 பருப்புகளை மிதமான சூட்டில்சிறிது நேரம் வறுத்து எடுத்து வைத்தால் புழு பூச்சி  வராது.

 சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால் முளை வராமல் நீண்ட நாள்கள் அப்படியே இருக்கும்.

பூண்டு பற்களை வெது வெதுப்பான நீரில் போட்டு பிறகு எடுத்து உரித்தால் எளிதில் உரிக்க வரும்.

பாத்ரூமில் பிடித்திருக்கும் பாசிகளை போக்க கோலமாவை போட்டு தேய்த்தால் பளிச்சென்று மாறிவிடும். மீந்து போன இட்லி மாவையும் பயன்படுத்தலாம்.

 கத்திரிக்காயை வெட்டி தண்ணீரில் போடும்போது அந்த தண்ணீரில் சிறிதளவு  பால் விட்டு நறுக்கி போட்டால் கத்தரிக்காய் கருக்காமல் அப்படியே இருக்கும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com