சின்ன சின்ன சமையல் டிப்ஸ்...

அவசரமாய் புதுவிதமான பாயசம் செய்ய கடலைமாவை வாசனை வரும் வரை வறுத்து அதில் தேவையான பாலை ஊற்றி வேகவைத்து, சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்தால் சூப்பரான அவசர பாயசம் ரெடி.வித்தியாசமான
சின்ன சின்ன சமையல் டிப்ஸ்...

அவசரமாய் புதுவிதமான பாயசம் செய்ய கடலைமாவை வாசனை வரும் வரை வறுத்து அதில் தேவையான பாலை ஊற்றி வேகவைத்து, சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்தால் சூப்பரான அவசர பாயசம் ரெடி.வித்தியாசமான ருசியில் சுவையாக இருக்கும்.

வாழை இலையைப் பின்புறமாகத் தணலில் காட்டிய பிறகு சாப்பாட்டு பொட்டலம் கட்டினால் இலை எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.

உளுந்து வடைக்கு ஊற வைக்கும் போது ஒரு கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி என்ற விகிதத்தில் அரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.

தண்டுக்கீரை வாங்கினால் முற்றலாயிருக்கும் தண்டுப்பகுதியை புளிக்குழம்பு, சாம்பாரில் போட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

உளுத்தம்பருப்பை சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்து தேவைக்கேற்ப தேங்காய், மிளகு சேர்த்து சட்னி செய்தால் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள
நன்றாக இருக்கும்.

குழம்புக்கு, ரசத்துக்குப் புளியைக் கரைக்கும் பொழுது, சிறிது வெதுவெதுப்பான வெந்நீரில் குழம்புக்குத் தேவையான புளியையும் உப்பையும் போட்டு சிறிது நேரம் கழித்துக் கரைத்தால் வேலை எளிதாகும்.
- கவிதாபாலாஜிகணேஷ்

காலிப்ளவரை சமைக்கும்போது, சிறிது பால் சேர்த்தால் வெள்ளை நிறம் மாறாது. பச்சை வாடை தெரியாது.

இரவில் சப்பாத்தியோ, பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் உருளைக்கிழங்கைப் போட்டு மூடி வைத்தால் அப்படியே மிருதுவாக இருக்கும்.

பொரித்த அப்பளத்தைப் பொடித்து, இரண்டு தேக்கரண்டி துருவியத் தேங்காய், கறிவேப்பிலை, புளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் சுவையான துவையல் தயார்.

பஜ்ஜி போடும்போது நன்றாக உப்பி வருவதற்கு சமையல் சோடாமாவு சேர்ப்பதற்கு பதிலாக சிறிது இட்லி மாவைச் சேர்த்து செய்தால், பஜ்ஜி நன்றாக உப்பி வருவதுடன், உடம்புக்கும் கெடுதல் கிடையாது.

பலகாரங்கள் செய்யும்போது சூடான எண்ணெய்யில் இஞ்சியைத் தட்டி அதை வறுத்தெடுத்தால் எண்ணெய் கசண்டு இருக்காது. பலகாரங்கள் பல நாள்கள் கெடாமலும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com