தக்காளி ஊறுகாய்

தக்காளியைப் பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, வெயிலில் வைத்து எடுக்கவும். அடுத்தடுத்த நாள்களில், தக்காளியைத் தட்டில் பரப்பிக் காய வைக்கவும்.
தக்காளி ஊறுகாய்


தேவையானவை : 

தக்காளி  - 1கிலோ
காய்ந்த மிளகாய் - 150 கிராம்
வெந்தயம், கடுகு - தலா ஒரு தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி 
கல் உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க : 
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
 நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : 

தக்காளியைப் பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, வெயிலில் வைத்து எடுக்கவும். அடுத்தடுத்த நாள்களில், தக்காளியைத் தட்டில் பரப்பிக் காய வைக்கவும். தக்காளியில் உள்ள தண்ணீர் நன்கு உலர்ந்ததும்,  ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். கடுகையும் வெந்தயத்தையும் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். காய வைத்த தக்காளியுடன் வறுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து, மஞ்சள்தூள், பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி ஆறவைக்கவும். பிறகு, ஈரமில்லாத பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும். இந்த ஊறுகாய் 3 மாதம் வரையிலும் கெடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com