பெண்களின் குட்டி சாம்ராஜியம்

பெண்களின் நலத்திற்காக பெண் ஒருவரால் உருவாக்கப்பட்டு, பெண்களால் தயாரிக்கப்பட்டு, பெண்களால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்று உள்ளது என்றால் வியப்பாக தானே உள்ளது.
பெண்களின் குட்டி சாம்ராஜியம்


பெண்களின் நலத்திற்காக பெண் ஒருவரால் உருவாக்கப்பட்டு, பெண்களால் தயாரிக்கப்பட்டு, பெண்களால் விற்பனை செய்யப்படும் பொருள் ஒன்று உள்ளது என்றால் வியப்பாக தானே உள்ளது. இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரராக விளங்குபவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையைச் சேர்ந்த சிந்துஅருண்.  அவர் உருவாக்கிய பெண்களின் சாம்ராஜியம் பற்றி அவரிடம் கேட்ட போது சொன்னார்:

""நான் சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண். தமிழ் வழியில் தான் கல்வி கற்றேன். ஆனால் வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்று ஆசை ஏற்பட்டது. அதன் காரணமாக லண்டனுக்கு சென்று நான் விரும்பிய எம்.எஸ்.சி படிப்பை  படித்தேன். அங்கேயே எனக்கு வேலையும் கிடைத்தது. மூன்று ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். கை நிறைய சம்பளம். ஆனால் மனதிருப்தி ஏற்படவில்லை. நம்  சொந்த நாட்டிலேயே தொழில்  செய்யலாம் என்று வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்பினேன்.  அதன்காரணமாக  சொந்த நாடு  தான் இனி என்று தீர்க்கமான முடிவுக்கு வந்தேன். சொர்க்கமே என்றாலும் நம்முடைய ஊரை போன்று வராது.

எனக்கு 26 வயதானதும் அம்மா, அப்பா திருமணம் செய்து வைத்தார்கள். கணவர் அருணும் பிசினஸ் செய்பவர். சரி அடுத்து என்ன செய்யலாம் என்ற நான் நினைத்த கொண்டிருந்து போது ,   வீட்டில் செக்கு  எண்ணெய் இரண்டு  வருடங்களுக்கு மேல்  உபயோகித்ததில் அது நம் உடலுக்கு பல விதத்தில்  நன்மை தருகிறது  என்று தெரிந்து கொண்டேன். அதை 12 ஊட்டச்சத்து நிபுணர்களிடம்  பேட்டி எடுத்து உறுதி செய்து கொண்டேன். 

பாரம்பரியமான  செக்கு தேங்காய் எண்ணெய் , கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உபயோக படுத்துவதினால் பெண்களுக்கு  அதிகமாக வரும் மூட்டுவலி , இடுப்புவலி  தவிர்க்கலாம் என்றும் அறிந்து கொண்டேன் . அதன் பின் தான் வேதி பொருள்கள் எதுவும் கலக்காத    பாரம்பரியமான  செக்கு தேங்காய் எண்ணெய் , கடலை எண்ணெய், நல்லெண்ணெய் PRESSO என்ற பிராண்டில்  தயாரித்து தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக   டெலிவரி செய்ய ஆரம்பித்தோம் . என் நெருங்கிய உறவினர்  குணம்மா , நீண்ட நாள்களாக மூட்டு வலியில் கஷ்டப்பட்டு வந்தார் . தொடர்ச்சியாக  நம்  செக்கு  எண்ணெய்  உபயோக படுத்தியதால் , "மூட்டு வலி இப்போது இல்லை' என்றார்.  என் மனதில் உருவான எண்ணம்  நாம் தயாரிக்கும் பொருள்கள்  பெண்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருளாக இருக்க வேண்டும். அதே நேரம் அவர்களின் ஆரோக்கியம் மேம்பட அந்த பொருள் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான்  presso செக்கு எண்ணெய் தயாரிப்புகள்.

எங்கள் எண்ணெய்  முற்றிலும் பெண்கள் குழுவால் தயாரிக்கப்பட்டு, பெண்களால், பெண்களுக்கான பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 60 மேற்பட்ட டிஸ்ட்ரிபியூட்டர்  மற்றும்  reseller Presso வில்   இருக்கிறார்கள். மேலும் மத்திய கிழக்கு நாடுகளான குவைத், துபாய்  போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

தனக்கு மட்டும் பயன்தரும் வகையில் இருப்பதை விட சமூகத்தில் பொருளாதாரத்திற்கு கணவனை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை நிலை உயர அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து, நம்பிக்கையின் உருவமாக திகழ்க்கிறார்'' சிந்து அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com