சின்னத்திரையில் நடிக்க நேரமில்லை!
By -ப்ரியா | Published On : 10th March 2021 06:00 AM | Last Updated : 10th March 2021 06:00 AM | அ+அ அ- |

நீலிமா ராணி "தேவர் மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பவர். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 21 வயதிலேயே திருமணம் செய்து விட்டார். ஆனாலும்,தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். குறிப்பாக சினிமாக்களில் துணை கதாநாயகிகளாக சின்னச் சின்ன ரோல்களில் நடித்து இருந்தாலும் சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. "தலையணைப் பூக்கள்', "அரண்மனைக்கிளி' போன்ற தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்தவர் தற்போது சின்னத்திரை தயாரிப்பாளராக மாறியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி இவர் தயாரித்துள்ள "என்றென்றும் புன்னகை' தொடர் 180 எபிசோட்டுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. அவரிடம் பேசியதிலிருந்து:
""மார்ச் 2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்திற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான "அரண்மனைக்கிளி' தொடர் நிறைவடைந்தது. அதன் பிறகு நான் சின்னத்திரை தொடர் தயாரிப்பில் இறங்கினேன். என்றென்றும் புன்னகை ஒரு முக்கோண காதல் கதை. ஆர்.ஜேவாக பணியாற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் கதாநாயகி. பணக்கார பாட்டி தனது பேரனுக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். இது தெலுங்கில் வெற்றிப்பெற்ற சின்னத்திரை தொடர்.
தற்போது "சக்ரா' படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி சினிமா, வெப் சீரிஸ் நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் நடிப்பேன். சின்னத்திரையில் நடிக்க நேரமில்லை. எனக்கென்று தனியாக நிறுவனம் உள்ளது. அதில் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தி கொடுக்கிறோம். அடுத்து அழகுக்கலை துறையிலும் கவனம் செலுத்தயிருக்கிறேன். அதனால் இப்போது சின்னத்திரைக்கு இடைவெளி கொடுத்துள்ளேன்.
ஜீ தமிழ் சேனல் தான் உங்களால் நிச்சயம் பண்ண முடியும்னு மோட்டிவேட் பண்ணி எங்களை அங்கீகரிச்சிருக்காங்க. அதனால் 1000 எபிúஸாட்ஸ் தாண்டி "என்றென்றும் புன்னகை' வரவேற்பை பெறும் என்கிறார் நீலிமா ராணி.
பொதுவாக வெள்ளித் திரை நாயகிகளில் தொடங்கி சின்னத்திரை நாயகிகள் வரை தவறாமல் செய்யும் ஒரே விஷயம் என்றால், அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.இந்த நிலையில் நீலிமா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் இளமையில் பட வாய்ப்புக்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.