நடிப்பதுடன் கடமை முடிந்துவிட்டது! - ரெஜினா

விஷால் நடிப்பில்  வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் "சக்ரா' படத்தில் வில்லியாக நடித்து அதிர வைத்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.  தமிழ், தெலுங்கில் தனக்கென தனிப் பாதை அமைத்துக்கொண்டிருக்கிறார். 
நடிப்பதுடன் கடமை முடிந்துவிட்டது! - ரெஜினா

விஷால் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் "சக்ரா' படத்தில் வில்லியாக நடித்து அதிர வைத்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா. தமிழ், தெலுங்கில் தனக்கென தனிப் பாதை அமைத்துக்கொண்டிருக்கிறார்.

பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறீர்கள். இது தானே அமைந்ததா; நீங்களே தேர்வு செய்துகொண்டதா?

இரண்டுமே தான். எனது தோற்றம், திரையிலும் தனிப்பட்ட வாழ்விலும் நான் பின்பற்றும் எனது ஃபேஷன், என்னால் எந்த அளவுக்கு நடிக்க முடிகிறது என இவை எல்லாமே இயக்குநர்களால் கவனிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். இயக்குநர்கள் இல்லாமல், கதாபாத்திரங்களை எழுதும் திரைக்கதாசிரியர்கள் இல்லாமல் எனக்கு இவ்வளவு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்காது.

"சக்ரா' படத்தின் கதாபாத்திரத்தை சொன்னபோது என்ன நினைத்தீர்கள்?

படத்தின் இயக்குநர் ஆனந்த் முதலில் படத்தின் கதையைத்தான் சொன்னார். அதன்பின்னர் ஒரு வருடம் ஓடியேவிட்டது. எனக்கான கதாபாத்திரம் எது என்பதை சொல்லவேயில்லை. பிறகுதான் விஷால், ஆனந்த் இருவருமே எனக்கு வில்லி கதாபாத்திரம் சரியாக இருக்கும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அதை என்னிடம் சொன்னபோது நான் "வாரே வாவ்' என்றேன். ஏனென்றால், என்னுடைய முடிவும் அதுவாகத்தான் இருந்தது. வில்லி லீலா கேரக்டரை உங்களால் சிறப்பாகச் செய்யமுடியும் என்று இயக்குநர் சொன்னபோது, ஒரு நடிகராக நான் வளர்ந்துகொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். என் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் எனும்போது அதற்குரிய நியாயத்தைச் செய்யவேண்டியதுதான் எனது கடமை. அதைச் செய்திருப்பதாக நம்புகிறேன்.

டிஜிட்டல் உலகில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?

எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள், தோழிகள் பலரது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது என்று நிறைய கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். ஹேக் செய்வதில் "எத்திகல் ஹேக்கிங்' என்று ஒரு பெரிய உலகமே இயங்குவதாகக் கூறுகிறார்கள். எப்படியிருந்தாலும் ஹேக் செய்வதை புனிதப்படுத்தமுடியாது.

இணையத் தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள்?

என்னைப்போன்ற நடிகைக்கு நடிப்பதுடன் கடமை முடிந்து விடுகிறது. ஆனால், கரோனா காலத்தில் திரையுலகத்துக்கு பாதுகாப்பான ஒன்றாக ஓடிடி இருந்திருப்பதை நாம் எல்லோரும் கண்கூடாகப் பார்த்தோமே..! ஒரு நடிகராக கேட்டீர்கள் என்றால், ஓடிடி படைப்புகளில் நடிக்க அதிக ஆவலாக இருக்கிறேன். அசலான படைப்புகளை பார்க்க விரும்பும் யாருக்கும் ஓடிடி சிறந்த தேர்வாக இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் "நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் ஆக இருக்கிறதே..?

இதற்கு முன் 4 முறை ரிலீஸ் தேதி அறிவித்தார்கள். இது 5-ஆவது முறை. என்றாலும் செல்வராகவன் என்கிற பெயருக்கு இருக்கும் எதிர்பார்ப்பு சற்றும் குறைந்ததல்ல. நானும் அவருடையை ரசிகைதான். அதில் நான் நடித்திருக்கும் மரியா கதாபாத்திரத்துக்கான வசனங்கள் மிக மிகக் குறைவு. எனது முகம் அதிகமாக நடித்திருக்கிறது. "சக்ரா' போலவே இதிலும் உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com