க​தம்‌​ப‌ம்!

85 ஆண்டுகளாக ஆயத்த ஆடை தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற "லெவிஸ்' நிறுவனத்தின் டெனிம் தயாரிப்புகளின் விளம்பரத் தூதுவராக தீபிகாபடுகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
க​தம்‌​ப‌ம்!

விளம்பரத் தூதுவரான தீபிகா படுகோனே!

85 ஆண்டுகளாக ஆயத்த ஆடை தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற "லெவிஸ்' நிறுவனத்தின் டெனிம் தயாரிப்புகளின் விளம்பரத் தூதுவராக தீபிகாபடுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இளைய தலைமுறைப் பெண்களைக் கவரும் வகையில் புதிய டிசைன்களை உருவாக்கி விற்பனையை
அதிகரிக்க டெனிம் நிறுவனம் கருதுகிறது. ""ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட்களை அணிவதில் ஆர்வமுள்ள என்னை சர்வதேச அளவில் டெனிம் நிறுவனம் விளம்பரத் தூதுவராக தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதோடு, இளம் பெண்கள் சார்பில் எனக்குக் கிடைத்துள்ள கௌரவமாகவும் கருதுகிறேன்''
என்கிறார் தீபிகாபடுகோனே.

தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை!

""மீண்டும் கரோனா 2- ஆம் அலை வீச தொடங்கியுள்ளது. எனவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும் நான் கடந்த ஆண்டில் கடைப்பிடித்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். பொது முடக்கம் காரணமாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டாலும், ரசிகர்களுக்கு பெரிய திரையில் தியேட்டரில் பார்ப்பது போன்ற சுவாரசியம் இதில் கிடைக்காது என்பது என்னுடைய கருத்தாகும். என்னைப் போலவே பாலிவுட் நட்சத்திரங்களில் பலரும் கருதுவதால், ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் விரைவில் தியேட்டர்களுக்கே திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்'' என்கிறார் நடிகை பரினிதி சோப்ரா.


என்னுடைய சாதனைகள் திருப்தியளிக்கின்றன!

""இப்போது நான் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய தருணத்தில் இருக்கிறேன். தினந்தோறும் அன்றைய தினத்தில் எது முக்கியமென்று நினைக்கிறேனோ அதை நிறைவேற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை என் வாழ்க்கையில் நான் தனிப்பட்ட முறையிலும், தொழில் முறையிலும் சாதித்தவை எனக்குத் திருப்தியளிக்கின்றன. அறிவுரை கூறுமளவுக்கு எனக்கு வயதாகவில்லை என்றாலும், என்னைவிட இளவயது பெண்களுக்கு கூற விரும்புவது இதுதான். உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கென்று பிடிமானத்தையும், மகிழ்ச்சியையும் சரிசமமாக அனுபவிக்க சேமிப்பு அவசியம். ஓர் ஆணுக்குள்ள திறமையையும், சக்தியையும் பெற வேண்டுமென்று நான் நினைப்பதில்லை. ஆனால் பெண்கள் தங்களுக்குள்ள திறமையை வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் தயங்கக் கூடாது'' என்கிறார் ஸ்ருதி ஹாசன்.


மாற்றத்தை வரவேற்கிறேன்!

""பொது முடக்கத்திற்கு முன்பு ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுப்பதில் இப்போது நான் மும்முரமாக உள்ளேன். முன்பெல்லாம் ஒரு படத்தை எடுக்க பல ஷெட்யூல்கள் தேவைப்படும். மாதகணக்கில் எடுப்பார்கள். இப்போது கரோனா காரணமாக ஒரே ஷெட்யூலில் குறைந்த தொழில் கலைஞர்களை வைத்து படமெடுக்க திட்ட மிடுவதால், நேரம் மிச்சமாவதுடன், தயாரிப்பாளர்களுக்கு செலவும் குறைகிறது. படத்தையும் விரைவாக முடிக்கிறார்கள். முன்பு போல் செட்டில் ஒருவரையொருவர் சந்திக்கும்போது கட்டியணைப்பதோ, கை குலுக்குவதோ இல்லை. வணக்கம் சொல்வதோடு சரி, இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்'' என்கிறார் ஊர்வசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com