கும்மாயம்

பச்சரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து திரித்து மாவாக்க வேண்டும். மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டி படாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
கும்மாயம்

தேவையானவை:

பச்சரிசி - 400 கிராம்
உளுந்தம் பருப்பு - 800 கிராம்
முந்திரி பருப்பு - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 10
கருப்பட்டி - 750 கிராம்
நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து திரித்து மாவாக்க வேண்டும். மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டி படாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். கருப்பட்டியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி மாவோடு சேர்த்து கரைக்க வேண்டும். வாணலியில் கரைத்த மாவினை விட்டு அடிபிடிக்காமல் கிளற வேண்டும். இதில் நெய்யையும் சேர்த்து மாவு நன்றாக வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும். அதில் வறுத்த முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் சேர்த்தால் ருசி சூப்பராக இருக்கும். கருப்பட்டி உடலுக்கு நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com