பட்டம் துறந்த இளவரசி!

ஜப்பான் இளவரசி மேக்கோ தனது அரசபட்டத்தை துறந்து நீண்ட கால காதலரை கரம் பிடித்தார்.
பட்டம் துறந்த இளவரசி!

ஜப்பான் இளவரசி மேக்கோ தனது அரசபட்டத்தை துறந்து நீண்ட கால காதலரை கரம் பிடித்தார்.

ஜப்பான் அரசர் நருஹிட்டோவின் இளைய சகோதரரின் மகள் மேக்கோவுக்கும். அவருடன் கல்லூரியில் பயின்ற கீய்கோமுரோவுக்கும் சென்ற அக்டோபர் 26 -இல் திருமணம் நடைபெற்றது.

ஜப்பான் இளவரசியான இவருக்கு, கடந்த 2012-ஆம் ஆண்டில் கல்லூரியில் தன்னுடன் படித்த கீய்கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருடன் காதல் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு 2017-ஆம் ஆண்டில் இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்தத் திருமணம் குறித்து பெரும்பாலும் ஊடகங்களில் விமர்சனங்களே முன் வைக்கப்பட்ட நிலையிலும் திட்டமிட்டபடி தனது காதலரை மேக்கோ மணந்தார்.

ஜப்பான் அரச குடும்பச் சட்டத்தின்படி, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மணந்தால் உறுப்பினர்கள் தங்களது அரச பட்டத்தை இழக்க வேண்டும். அந்த வகையில் தனது இளவரசி பட்டத்தை மேக்கோ இழந்துள்ளார்.

இதன் மூலம் அரச பட்டத்தை துறந்து, பாரம்பரிய சம்பிரதாயங்களை பின்பற்றாமல் திருமணம் செய்து கொண்ட முதல் அரச குடும்பத்து பெண் என்கிற பெருமையை பெற்றுள்ளார் இளவரசி மேக்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com