தூதுவளை அடை

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊற வைக்கவும் துவரம்பருப்பு, பாசிபருப்பு, கடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக ஊற வைக்கவும். தூதுவளையை ஆய்ந்து கீரையை மட்டும் எடுக்கவும்.
தூதுவளை அடை

தேவையானவை:

பச்சரிசி - அரை கிண்ணம்
புழுங்கல் அரிசி - அரை கிண்ணம்
துவரம் பருப்பு , உளுந்தம் பருப்பு,
பாசிபருப்பு, கடலைபருப்பு - தலா 1 கைப்பிடி
தூதுவளைக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
இஞ்சி , காரட் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - 1துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊற வைக்கவும் துவரம்பருப்பு, பாசிபருப்பு, கடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக ஊற வைக்கவும். தூதுவளையை ஆய்ந்து கீரையை மட்டும் எடுக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாய், சோம்பு, உப்பு போட்டு அரைத்து அதில் அரிசி, உளுந்தைப் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்து பருப்பு வகைகளையும் பொறுபொறுவென்று அரைத்து எடுக்கவும். கடைசியில் தூதுவளையைப் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து மாவில் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போடவும். இஞ்சி, காரட் துருவல், தேங்காய்த் துருவல் பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும். அதன்பின் தோசைக் கல்லில் அடைகளாக ஊற்றி, எடுத்து தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com