வாழைப்பூ  முருங்கைக்கீரை சூப் 

முதலில் வாழைப்பூவையும் முருங்கைக் கீரையும்  ஆய்ந்து சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து வதக்கவும்.
வாழைப்பூ  முருங்கைக்கீரை சூப் 

தேவையானவை:

வாழைப்பூ - 200 கிராம் 
முருங்கைக்கீரை  - 100 கிராம் 
சிறிய வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது  - 20 கிராம் 
மிளகு - 10 கிராம் 
கருஞ்சீரகம் -10 கிராம் 
வெந்தயம் - 1 கிராம் 
சோம்பு - 10 கிராம் 
கறிவேப்பிலை - 5 கிராம் 
பட்டை - 5 கிராம் 
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
மல்லி விதை -5 கிராம் 
கொத்துமல்லி - சிறிது (பொடியாக நருக்கியது )
நெய் - 5 கிராம்
எண்ணெய் -  தேவைக்கேற்ப

செய்முறை :  

முதலில் வாழைப்பூவையும் முருங்கைக் கீரையும் ஆய்ந்து சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து வதக்கவும். பின்னர் அதை நன்றாக மிக்சியில் அரைக்கவும். அதே வாணலியில் மிளகு, கருஞ்சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, வெந்தயம் மற்றும் மல்லி விதையைச் சேர்த்து லேசாக வறுக்கவும், பின்னர் அதை நன்றாக மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சூப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும், பின் அதில் வெட்டிய சிறிய வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கவும், பின் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும், பின் அதில் அரைத்த வாழைப்பூ முருங்கைக்கீரை விழுதை யிட்டு லேசாக வதக்கி இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இது மிக ஆரோக்கியமான சூப் இதில் கொஞ்சம் நறுக்கிய கொத்துமல்லியை மேலாக தூவி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com