மழைக்காலத்தில் சருமப் பராமரிப்பு!

மழைக்காலம் தொடங்கியவுடன், நம்மைச் சுற்றிலும் பசுமையான சூழல் உருவாகிறது. மழை காலத்தின் போது வானிலை மாற்றங்கள் காரணமாக, நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்துப்பட வேண்டும்.
மழைக்காலத்தில் சருமப் பராமரிப்பு!

மழைக்காலம் தொடங்கியவுடன், நம்மைச் சுற்றிலும் பசுமையான சூழல் உருவாகிறது. மழை காலத்தின் போது வானிலை மாற்றங்கள் காரணமாக, நம் உடலில் சிறப்பு கவனம் செலுத்துப்பட வேண்டும். ஏனெனில், மழைக்காலத்தில் தோல் தொற்று மற்றும்  சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கிறது. எனவே, மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை, பராமரிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை பார்ப்போம்:

எண்ணெய் சருமத்திற்கு:

எண்ணெய்  சருமம் உள்ளவர்கள் பெரும்பாலும் மழைக்காலத்தில் தங்கள் சருமத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஏனெனில், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தோல் தொடர்பான சிக்கல்கள் அதிகமாக இருக்கிறது. எனவே, உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக  இருந்தால், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பருவமழையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, வாரத்திற்கு இரண்டு முறையாவது முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதோடு, உங்கள் முக ஒப்பனையில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நன்மையளிக்கிறது. மேலும், உங்கள் தோலில் ஜெல் சன்ஸ்கிரீமைப் பயன்படுத்த வேண்டாம்.

வறண்ட சருமத்திற்கு:

மழைக்காலம் தொடங்கியவுடன், வறண்ட சருமத்தில் தோல் தொடர்பான பிரச்சினைகள் தொடங்குகின்றன. எனவே, உங்கள் தோல் வறண்டிருந்தால் சருமத்தை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பருவத்தில் வறண்டத் தோலைப்  பராமரிக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், வறண்ட சருமத்திற்கு ஆரோக்கியமான நீரேற்றம் தேவைப்படுகிறது. (மேலும் படிக்க  தோல் தொற்றுநோயைத் தடுக்க வேம்பின் பயன்பாடு)

மென்மையான சருமத்திற்கு:

ஸென்ஸிடிவான சருமம் உள்ளவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். ஏனெனில் இந்த வகை சருமத்தில் தோல் வறண்டதாகவுமில்லை, எண்ணெய் நிறைந்ததாகவுமில்லை. இதுபோன்ற சருமத்தில் பெரும்பாலும்  மூக்கு, கன்னம் மற்றும் நெற்றியில் அதிக எண்ணெய் இருக்கிறது. எனினும், முகத்தின் மற்ற பக்கங்களில் தோல் வறண்டு காணப்படுகிறது. இந்த வகை சருமத்திற்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது.எனவே, இந்த வகை சருமத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தோலில் சன்ஸ்கிரீமைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com