வே‌ண்​டி​யதும்... வேண்டாததும்... நவராத்திரி நாள்களில்

வீட்டில்  மங்களகரமான  பாடல்,  பூஜைகள்,  துதிகள்  ஒலிக்க வேண்டும்.  பாட வேண்டும்.
வே‌ண்​டி​யதும்... வேண்டாததும்... நவராத்திரி நாள்களில்

செய்ய வேண்டியவை :

வீட்டில்  மங்களகரமான  பாடல்,  பூஜைகள்,  துதிகள்  ஒலிக்க வேண்டும்.  பாட வேண்டும்.
குத்து விளக்கு  இரண்டு வேளையும்  பிரகாசமாக  எரிய வேண்டும்.
வீட்டில்  மாக்கோலம்  இட்டு  மாவிலை  தோரணம்  கட்டி மகிழ்ச்சியாக  மலர்ந்த  புன்சிரிப்போடு பெண்கள் கலகலப்பாக  இருக்க வேண்டும்.
அக்கம்பக்கத்தினரை  அழைத்து  தாம்பூலம் கொடுத்து  உபசரிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள்  எலுமிச்சை சாதமும், அடுத்த மூன்று நாட்கள்  சர்க்கரைப் பொங்கலும்,  கடைசி மூன்று நாட்கள்  வெண்பொங்கல், தயிர் சாதம் செய்ய  வேண்டும். மாலை நேரம்  சுண்டல்  செய்ய வேண்டும். 

செய்யக் கூடாதவை:

மிளகாய்  மற்றும்  நெடி  வரக்கூடியதான  பொடி வகைகளை வறுக்கவோ,  இடிக்கவோ கூடாது.
பணம்,  நகைகள் போன்றவற்றை  கடன்  கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
நவராத்திரி  ஒன்பது நாள்களும்  லட்சுமி  ஊசியில்  தவம்  செய்வதாக  ஜதீகம்.  அதனால்  அந்த  ஒன்பது  நாளும் ஊசி கொண்டு  துணி தைக்கக் கூடாது.
இரவு நேரத்தில்  வீடு பெருக்கக் கூடாது.
அம்மனுக்கு எடுத்த ஆரத்தியை  கால்படும் இடத்தில்  கொட்டக் கூடாது.
கொலு வைத்துள்ள அறையில்  தொலைக்காட்சி பெட்டி  வைத்து  அழுகின்ற  சத்தம்  வரக் கூடாது.
வீட்டில்  சண்டை  போடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com