ராஜ்மா கார சுண்டல்

ராஜ்மாவை உப்பு சேர்த்து நீர் விட்டு (குழையாமல்) வேக விடவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து நறுக்கிய குடமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வெந்த ராஜ்மாவை
ராஜ்மா கார சுண்டல்

தேவையானவை:

ராஜ்மா - 1 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
குடமிளகாய் - பாதியளவு
மாங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி

செய்முறை:

ராஜ்மாவை உப்பு சேர்த்து நீர் விட்டு (குழையாமல்) வேக விடவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து நறுக்கிய குடமிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வெந்த ராஜ்மாவை சேர்த்து வதக்கி, கேரட் துருவல், மாங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com