முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
வரகரிசி பாயசம்
By -தவநிதி | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 15th October 2021 04:53 PM | அ+அ அ- |

தேவையானவை:
(சிகப்பு ரோஜா இதழ்) - 1 கிண்ணம்
வரகு அரிசி - அரை கிண்ணம்
பால் - 6 டம்ளர்
கண்டன்ஸ்ட் மில்க் - அரை கிண்ணம்
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கிண்ணம்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 10
முந்திரி - 10
வால்நட் துண்டுகள் - 10
செய்முறை:
ரோஜா இதழ்களை 1 டம்ளர் கொதிக்கும் நீரில் 4 நிமிடம் போட்டு கொதிக்க வைத்து, பின் நீரை வடித்து கொள்ளவும். பின்னர், குங்குமப்பூவை ஒரு கிண்ணத்தில் சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும். ஒரு கிண்ணத்தில் வரகு அரிசி ரோஜா நீருடன் ஊற வைக்க. பின் அரிசியை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்கவும். பின்னர், மிதமான தீயில் ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் உருகியவுடன், முந்திரி, திராட்சை, வால்நட்டை வறுத்துக் தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, அதில் வேகவைத்த அரிசியை சேர்க்கவும். நன்றாக கொதிவரும்போது, குங்குமப்பூ சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பால் நிறம் மஞ்சள் நிறமாகும் வரை கிளறவும். பின்னர், கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறவும். அதனுடன் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும். பால் மேலும் 15 நிமிடங்கள் கொதித்து சுண்டியதும், சர்க்கரை சேர்த்து கிளறவும். பின்னர், வறுத்த முந்திரி திராட்சையை பாயசத்துடன் சேர்த்து கிளறி விடவும். வரகரிசி பாயசம் தயார்.
-தவநிதி