கொலு டிப்ஸ்...

கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும் அன்பை பெருக்கவும். பாரம்பரிய கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவும்தான். பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது.
கொலு டிப்ஸ்...

கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும் அன்பை பெருக்கவும். பாரம்பரிய கலாசாரத்தைக் கடைப்பிடிக்கவும்தான். பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது.

கொலு படிகளில் மரபாச்சி பொம்மை நிச்சயம் இடம் பெற வேண்டும்.

நவராத்திரி சமயத்தில் பூஜைக்கு வாங்கிய வெற்றிலை வாடாமல் இருக்க வெற்றிலையை ஒரு பித்தளைத் தம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள்.

வீட்டில் தாத்தா பாட்டி இருந்தால் குழந்தைகளை உட்கார வைத்து கொலுவில் உள்ள சுவாமி சிலைகளை சுட்டிக்காட்டி புராணகதைகள் சொல்ல வைக்கலாம்.

நவராத்திரிக்கு எப்போதும் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்றுதான் கூப்பிட்டு பூஜை செய்வோம். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக முதியோர்களை முதியோர் இல்லங்களிலுள்ள முதியோர்களைக் கூப்பிட்டு பூஜை செய்து பாருங்கள். அவர்களும் தங்களை உறவினர்களைப் போல் நேசிப்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்களென்று சந்தோஷப்படுவார்கள்.

ஒவ்வொரு நவராத்திரிக்கும் புது பொம்மைகள் வாங்குவது சம்பிரதாயம். கொலு வைக்கும் கோயில்களுக்கும் புது பொம்மை வாங்கித் தரலாம்.

கொலு பார்க்க வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, சுண்டல் போன்றவற்றை சணல் பைகள், காகிதப் பைகளில் வைத்துத் தரலாம். பிளாஸ்டிக் பைகளைத் தவிருங்கள்.

நம்மை கொலுவிற்கு அழைத்தவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது நம்மால் முடிந்த அளவில் சிறிய பொம்மைகளை வாங்கி அவர்களுக்கு பரிசாக அளித்தால் நமக்கும் அம்பிகையின் அருள் கிடைக்கும்.

நவராத்திரி சமயத்தில் பயன்படுத்திய விளக்கை சாம்பலுடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு மண்ணெண்ணெய் விட்டுக் கலந்து தேய்த்தபின் தனிச் சாம்பலால் நன்றாகத் தேய்த்து சுத்தமான துணி கொண்டு துடைத்து விட்டால் விளக்கு பளபளவென்று இருக்கும்.

கொலு, முடிந்த பின் மொத்தமாக பேக் செய்வதைத் தவிர்த்து ஒவ்வொரு படியில் வைத்திருக்கும் பொம்மைகளையும் தனித்தனியாக சிறு பெட்டிகளில் வைத்து அதைப் பெரிய பெட்டிகளில் வைத்தால் அடுத்த வருடம் அந்தப் படிக்குரிய பொம்மைகளை வரிசைப்படுத்த மிக வசதியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com