முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
தாம்பூல பையும் அதன் சிறப்பும்!
By - செளமியா சுப்ரமணியன் | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 13th October 2021 12:00 AM | அ+அ அ- |

நவராத்திரியின் போது வழங்கும் தாம்பூல பையில் இருக்க வேண்டியவைகள்:
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, ரவிக்கைத்துணி அல்லது புடவை.
இதில் வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.
மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்யும்.
கண்ணாடி, கணவனின் ஆரோக்கியத்தை காக்கும்.
வளையல், மன அமைதியை தரும்.
தேங்காய், பாவம் நீங்கும்.
பழம், அன்னதானப் பலன் கிடைக்கும்.
பூ, மகிழ்ச்சி பெருகும்.
மருதாணி, நோய் வராதிருக்க.
கண்மை, திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க.
தட்சணை , லட்சுமி கடாட்சம் பெருக.
ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் கிடைக்கும்.
தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள் என்பது நம்பிக்கை.
நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி அம்மன் யாருடைய ரூபத்திலாவது இருக்கலாம்.