கை வைத்தியம்!

தூக்கம் வராமல்  தவிப்பவர்கள்,  நரம்புத்தளர்ச்சி  உள்ளவர்கள்  ஜாதிக்காய்  தூள் ஒரு சிட்டிகை  அளவு பாலில்  கலந்து குடித்து வர குணமாகும்.
கை வைத்தியம்!

தூக்கம் வராமல் தவிப்பவர்கள், நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காய் தூள் ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்து வர குணமாகும்.

சீரகத்தூளை வெந்நீரிலோ அல்லது கரும்புச்சாறிலோ கலந்து சாப்பிட லேசான கிறுகிறுப்பு, பித்தம் குறையும்.

அதிமதுரம் சிறு துண்டை நாவினுள் அடக்கி அதன் சாற்றை விழுங்கினால் வறட்டு இருமல், வயிற்று வலியைப் போக்கும்.

லவங்கப்பட்டை ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வர குடற்புண் ஆறும்.

திப்பிலி பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர, மூச்சிரைப்பை குறைக்கும். சளியைக் கட்டுப்படுத்தும்.

தொந்தி குறைய..

அதிகமாக சாப்பிடக்கூடாது. அளவாக சாப்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தூக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். பகலில் தூங்கவே கூடாது.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

எலுமிச்சைச்சாறு, கொத்துமல்லிச்சாறு, இஞ்சிச்சாறு மூன்றும் சம அளவு கலந்து குடிக்கலாம்.

வாழைத்தண்டு, முள்ளங்கி இவற்றைப் பொடியாக நறுக்கி எலுமிச்சம் சாறு உப்பு சேர்த்து பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

இரண்டு பல் பூண்டு, சிறிது இஞ்சி இரண்டையும் நசுக்கி சிறிது தேன் கலந்து இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் தொந்தி போய்விடும்.

அன்னாசிப் பழத்துண்டுகளுடன் சிறிது ஓமத்தூளை சேர்த்து இரவில் தண்ணீர்விட்டு காய்ச்சி மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com