சேனைக்கிழங்கு  வடை 

சேனைக்கிழங்கை சுத்தம் செய்து, துருவலில் துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
சேனைக்கிழங்கு  வடை 

தேவையானவை:

சேனைக்கிழங்கு - கால் கிலோ
கடலைப்பருப்பு - கால் கிலோ
மிளகாய் - 6
பூண்டு - 1
இஞ்சி - சிறிய துண்டு
சோம்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

சேனைக்கிழங்கை சுத்தம் செய்து, துருவலில் துருவிக் கொள்ளவும். கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து, வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவைகளைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். இத்துடன் துருவிய சேனைக்கிழங்கு சோம்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை உப்பு ஆகியவைகளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு கலவையை நடுத்தர அளவு வடைகளாகத் தட்டி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் போடவும். பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சேனைக் கிழங்கு வடை தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com