சேனைக்கிழங்கு  பிட்லை 

சேனைக்கிழங்கை சுத்தப்படுத்தி துண்டுகளாக நறுக்கி நன்கு வேக வைத்து நீரைவடிக்கட்டி விடவும்.
சேனைக்கிழங்கு  பிட்லை 

தேவையானவை:

சேனைக்கிழங்கு - கால் கிலோ
துவரம் பருப்பு - 150 கிராம்
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 தேக்கரண்டி
தனியா - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
மிளகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
புளி - 2 நெல்லிக்காய் அளவு
கடுகு, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

சேனைக்கிழங்கை சுத்தப்படுத்தி துண்டுகளாக நறுக்கி நன்கு வேக வைத்து நீரைவடிக்கட்டி விடவும். புளியை போதுமான நீரில் கரைத்து வைக்கவும். தேங்காய்த் துருவல், தனியா, மிளகாய் வற்றல், மிளகு, பெருங்காயத்தூள், உளுந்தம் பருப்பு இவற்றை கலந்து வறுத்தெடுத்து, ஆறியதும் மிக்சியிலிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். துவரம் பருப்புடன் போதுமான அளவுநீர் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். இத்துடன் வேகவைத்த சேனைக்கிழங்கு, புளிகரைசல், மசாலாவிழுது, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கலவை நன்கு கொதித்து கமகமவென வாசனை வந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும். சேனைக்கிழங்கு பிட்லை தயார். சுவையும் சத்தும் மிக்கது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com